பாகலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் … நவம்பர் 10, 2013

முழுக்க முழுக்க மாணவர்களுடன் மலர் மருத்துவம், மற்ற உரையாடல் என்று நேற்று நெஞ்சில் நிறைந்தது.

நிறைய மாணவர்கள் வந்து, போய் இருந்தாலும் கிட்டத்தட்ட 20 மாணவர்கள் எங்கும் நகராமல் 4 மணி நேரம் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.கூடவே இருந்தவர்கள் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி வழியிலும் …முகாம் நடந்த பாகலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழங்கப்படுகிறது. எந்த மொழி தாய்மொழியானாலும் அனைவருக்கும் தமிழ் புரிகிறது.

இன்னும் குழந்தைத்தனம், எளிமை இழக்காத கிராம மாணவர்களின் விதவிதமான கேள்விகள், சிக்கல்கள், பகிர்வுகள் என்று மாறுபட்ட அனுபவம்.

எழுந்த பின் களைப்பு தெரிந்தது. முடிந்த பின், ஆளுக்கு ஒரு அட்டை எடுத்து வந்து மலர் மருந்தின் பெயரும், தமிழில் என் பெயரும் எழுதித் தருமாறு கேட்டார்கள்.

ஏறத்தாழ அனைவரும் நினைவாற்றல், புத்துணர்வு, தைரியம், தன்னம்பிக்கைக்காக குறிப்பாக மலர் மருந்துகள் கேட்டார்கள்.

மருத்துவ முகாமைவிட மாணவர்களுக்கு மருத்துவத்தைக் கற்றுத் தரும் முகாம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அக்காவிடம் சொன்னேன். அவள் செயல் வேகம் மிக அதிகம். நிச்சயமாக நிறைவேறும் என்று நம்புகிறேன்.

மாற்று மருத்துவம் தொடர்பான தேடல் மிக இயல்பாகவே மற்ற தேடல்களில் தொடர்கிறது. உதாரணமாக இறை ஆற்றல், இயற்கை, சுற்றுச்சூழல், முழு நலம், நுண் ஊட்டச்சத்து, பாரம்பரிய உணவு, இயற்கை வேளாண்மை …

முழுநலத்திற்கு அடிப்படையான உடல்-மன-ஆன்மா இணக்கம் குறித்த புரிதல் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.

கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் உடல்நலக் கேடுகளை விலை கொடுத்து வாங்குவதிலிருந்து நம்மை நாமே காக்க முடிகிறது மொத்ததில் சிந்தெடிக், கெமிக்கல், செயற்கை உலகத்திலிருந்து வெளியேறி உயிருள்ள உலகத்திற்குள் நுழைவது பெரிய வரம். இதெல்லாம் நிச்சயமாக நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் அசையா அறிவுச் சொத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s