22 (carrot) வயது தங்கம்…

படித்தது இயந்திரப் பொறியியல்
பிடித்தது நண்பர்களுடன் அரட்டை
கடிப்பது கைவந்த கலை-நடிப்பதும்தான்
ஊருக்கே நல்ல பிள்ளை போல
ஊரில் வளர்ந்த பிள்ளை!

பொருள் ஈட்ட நல் வேலை
தேடாமல் கிடைத்தது நல்ல வேளை
இப்போது வசிப்பது குஜராத்
படிக்கும்வரை நெல்லை-சென்னைதான்
படித்தபின் எல்லை இல்லைதான்
கலங்கலில் மண்-மணம் இனித்தது
சென்னையில் உறவுகள் பிடித்தது
ஆந்திரா கொஞ்சம் தகித்தது: காரம்-வெயில்

குஜராத்தில் எல்லாம் அருமைதான்
மரக்கறி உணவும்-மயக்கும் பெண்களும்
காத்திருக்கிறேன் மாட்டவில்லை
எப்போதும் சிரித்த முகம்
சிரிப்பில் கள்ளம் கபடமில்லை
நானும் மாட்டவில்லை இதுவரை
அடி எதுவும் வாங்கவில்லை

பொய்யா-மெய்யா பொழுதுபோக்கா
இல்லாத காதலின் பொல்லாத கற்பனையா
இணையத்தில் வழியும் என் இதயகீதம்
தங்கம் நான் மாட்டவில்லை இதுவரை

எதையும் சாதிக்கத் துடிக்கும் வயது
ஆனால் வாழ்க்கையின் பொருள்
பொருள் ஈட்டும்போதும் பிடிபடவில்லை
அடுத்து என்ன? புரிபடவில்லை!
வாழ்க்கைத்துணை தானே?
“அதற்குள் என்ன அவசரம் 22 தானே”?
அட எனக்கொன்றும் அவசரம் இல்லை
ஆனால் குஜராத்தில் என் வயசுக்காரன் அப்பாதான்
இளவயது மாப்பிள்ளைகள்
சம்பாதிக்கிறார்கள் சளைக்காது

சரி! எனக்கு என்ன குறை?
ஊர் ஊராய் சுற்றி உழைத்து
விதவிதமாய் உண்டு களித்து
எடை குறைக்க(!!!) விளையாடி
தோடா தோடா பேசிப்பழகி
கலங்கல் போகும் நாளை எண்ணியபடி
கலக்குறான் போங்க அகஸ்டின்!
என்னை எல்லோருக்கும் பிடிக்கும்
இதை எழுதிய என் சித்திக்கும்தான்
அதான் கேட்டதும் எழுதிட்டாங்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s