பட்டு?

உறவினர்: இவ்வளவு பேரைக் கூப்பிட்டுருக்கீங்க….பட்டு கட்டியிருக்கலாம் இல்லம்மா?
நான்: பட்டு சேலை எதுவும் கொண்டு வரலை
உறவினர்: நான் உன்னை சொல்லலைம்மா!…நான் உன்னை சொல்லலைம்மா!…நான் உன்னை சொல்லலைம்மா!

எந்த அளவுக்கு எனக்கு மூளை மழுங்கிப்போச்சுன்னு புரிஞ்சுகிட்டேன்
நான் என்ன உடுத்தினா என்ன? அதை யாரு கேக்கப்போறா?
அதுவும் நான் உடுத்தியிருந்தது ‘பட்டு மாதிரி…ஏதோ ஒண்ணுதான்’
திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஆனாலும் நான் வழக்கம்போல் எதற்கும் முன்னேற்பாடுடன் இருப்பதில்லைதான்

பூ வைக்கும் விழா மாமா மகன் திருமண உறுதிக்கு முதல் படி
வழக்கமாக இவ்விழா பெண்ணுக்குப் பூ வைக்கும் டோக்கன் புக்கிங் வகையைச் சேர்ந்ததுதான்
சிலர் இதை ஓரளவு நிச்சயதார்த்தம் அல்லது பரிசம் அல்லது ஒப்புத் தாம்பூலாம் எனும் அளவுக்குக் கொண்டாடுகிறார்கள்
அதாவது மணப்பெண்ணுக்கு மணமகன் வீட்டிலிருந்து பட்டுச் சேலை கொண்டு செல்வது விழாவின் தரத்தை உயர்த்தும் ஒரு வழி

சிலரை அழைக்கும் சின்ன விழாவானால் பட்டு தேவையில்லை
பலரை அழைக்கும் பெரிய விழாவில் ஏன் பட்டு இல்லை என்பதே அந்த மென்மையான அம்மணியின் கேள்வி…போயும் போயும் எதுவும் தெரியாத என்னிடம் கேட்டார்களே…என் முட்டாள் பதிலில் மிரண்டு மூன்று முறை வருத்தத்துடன் உன்னைக் கேட்கலைம்மா என்றார்கள்

மணப்பெண் மறு நாள் ஏதோ தேர்வு எழுதச் செல்வதால் பட்டு கட்டவில்லையாம்! பட்டு கட்டியபிறகு கொஞ்சம் வீட்டுக்குள்ளே இருக்கணுமாம் அதான் மாப்பிள்ளை வீட்டார் பட்டு கட்டவில்லையாம்! காலை பதினொரு மணிக்கு வந்து உறுதி சொல்லி பிறகு மாலை 05:30 மணிக்கு விழா…ஆனால் தடபுடல்…மணப்பெண் கட்டியிருந்தது புத்தம்புது பட்டுப் புடவைதான்…மாப்பிள்ளை வீட்டார் தந்தது என்றால் விழா வேறு அடையாளம் பெறும்!

சிலர் பழங்கள், மலர்கள், பட்டுப் புடவையோடு, தங்க நகையும் தருவார்கள்… அண்மைக்காலங்களில் சில மாப்பிள்ளைகள் தாமாக கைக்கடிகாரம், மொபைல் ஃபோன் என வாங்கித்தந்து அசத்துகிறார்கள்

வீட்டுக்கு வீடு, குடும்பத்துக்குக் குடும்பம், சமூகத்துக்கு சமூகம், ஊருக்கு ஊர் மாற்றங்கள்!!!

இந்த நுணுக்கங்களுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்….ஆளை விடுங்க சாமி!!!

இனி எப்ப ஊருக்குப் போனாலும் ஏதாவது ஒரு திடீர் விழாவுக்கு முன்னேற்பாடாக அசல் பட்டுடன் செல்ல வேண்டும்! அப்பதான்….யாராவது கேட்டாலும் இது பட்டுதான் என்று சொல்லி இன்னொரு முறை அதிபுத்திசாலித்தனத்தை நிரூபிக்க முடியும்….!!!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s