க ன வு தொடர்கிறது

ஒரு வருடத்தில் 5 பேர் அவர்கள் கனவில் நான் வந்ததாக சொன்னார்கள்…சொல்லாதவர்கள் எத்தனை பேர் தெரியவில்லை!

1. பங்களாதேஷ் தோழி சஞ்சிதா
2. தக்ஷ்
3. ரித்து
4. மகீ
5. அமெரிக்காவில் வசிக்கும் நேபாள் மாதுரி திதி

• சஞ்சிதாவின் கனவில் நான் அவர்கள் வீட்டுக்கு சென்று ஸ்வீட் சாப்பிடுவதாக வந்ததாம்…கனவில் வந்துபடியே ஓராண்டுக்குள் நான் உண்மையாக அவர்கள் வீட்டுக்குச் சென்றேன் எனக்குப் பிடித்த பெங்காலி ஸ்வீட் சுவைத்தேன்!
• தக்ஷ் கனவின் நான் வந்து புதன் கிழமை நான் வருவேன் என்று சொன்னேனாம்… புதன் என்றால் செவ்வாய் பின்னிரவில் என அவள் ஆயத்தமாக இருந்தாள்…அதன்படியே நான் செவ்வாய் பின்னிரவில் சென்றடைந்தேன்….
• ரித்துவின் கனவில் வந்து நான் அவளைத் தூக்கி, என் லட்டு என்று சொல்லி கொஞ்சினேனாம்….ஓரிரு வாரத்தில் அதே போல் கொஞ்சிய பிறகு ரித்துவிடம் எந்தக் கொஞ்சல் பிடித்தது என்றால்…கனவுக் கொஞ்சல் என்று பதில் வந்தது
• மகீ கனவில் நான் திடீரென வந்ததாகத் தோன்றியதாம் …மகீ அவ்வப்போது தக்ஷ் என்னை வரச்சொன்னாள் என்றதும், “அதான் நீ கனவில் வருவியே அதுதான் பெட்டர்” என்கிறாள்…அலுப்பு, செலவு இல்லை ஆனந்தம் மட்டும்! (இது உறுதியாகப் பலிக்கும் கனவு! 16 மாதத்தில் 9முறை சென்னை வந்திருக்கிறேன்) நான் வந்திருக்கிறேன் என்றதும் ஒரு முறை அமித் குட்டி, இங்கேயே செருப்பு போட்டுக்கொண்டா என்றானாம்…அதாவது ஸ்கைப் அல்லது நேரில்…இனி கனவிலா என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்
• மாதுரி திதி கனவில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோமாம்….பிறகு கனவு என்றதும் ஏமாற்றமாக இருந்ததாம்….ஆனாலும் பேசியது நிறைவாக இருந்ததாம்

ரித்து கனவுக் கொஞ்சல் பிடித்ததாகக் கூறியதும், தக்ஷ் நான் ரித்து கனவில் வரக்கூடாது என்று சொன்னதும் என்னை நிறைய யோசிக்க வைத்து விட்டது… என் கனவுகளுக்கு நான் பொறுப்பாக இருக்கலாம்… ஆனால் தக்ஷ் நினைப்பது போல ரித்து கனவிலோ பிறர் கனவிலோ வர நான் பொறுப்பா….தெரியவில்லை கனவு ஆய்வறிஞர்கள் சொல்லுங்கள்…தயவு செய்து குழப்பாமல் சொல்லுங்கள்
1. எல்லா உணர்வுகளும் உறவுகளும் கனவில் மட்டும் இருந்தால் சேதாரம் குறைவுதானே?! விழித்த பிறகும் மகிழ்ச்சி நிறைகிறது…மகிழ்ச்சி தராத கனவு என்றால் விழித்த பிறகு அப்பாடா….நல்ல வேளை கனவு என்று விட்டுவிடலாம்
2. இந்த பூமி வாழ்க்கையே கனவு போலத்தான் என்று உடல் நீங்கிய ஒரு உயிர் உலவிக் கொண்டு உலகுக்கு உரைக்க முற்படுவதாக ஒரு கதை படித்தது நினைவில் வருகிறது

ஆனால்…நிம்மதியாத் தூங்கவும் விடாம கனவில் வந்து டார்ச்சர் அப்புறம் இப்படி அம்மாமகளில் எழுதிக் கூடுதல் டார்ச்சர் என்று படிப்பவர்கள் சொல்வது நனவிலும் கேட்கிறது! சரி கனவு மேட்டர் கூடுதலாகப் புரிந்தால் சொல்லுங்கள்!!

இதைப் பதிப்பித்தவுடன்….மாலினி ஆன்லைனில். நான் நேற்று அமித் குட்டி கனவில் வந்தேனாம். என் நண்பரகள் பனியில் மாட்டிக் கொண்டார்களாம்…அவர்களை அமித் & அமித் அப்பா காப்பாற்றினார்களாம். பிறகு நான் அவர்களைப் பார்க்க விமானத்தில் வந்தேனாம்…. மாலினி இடைவிடாது சொல்லும் கதைகளின் விளைவா அல்லது அடிக்கடி நான் சென்னை வருவதா? எதனால் இந்த HOLLYWOOD கனவு??

கனவைப் பற்றி ஒரு பதிவு எழுதிய நாள்….மற்றுமொரு கனவு அப்டேட்….கிறங்குகிறேன். கனவுலகில்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s