இன்றும் பந்த் …………………………….22.02.2010

எதற்கு?
தெரியவில்லை!

இயல்பு வாழ்க்கை
பாதிப்பு?
ச்சே ச்சே பந்த் இங்கு
இயல்பு வாழ்கையின்
அங்கம்தான்!

பத்தில் இரண்டு பந்த்
ரொம்பக் கெடுபிடி
சைக்கிளில் காற்றைப் பிடுங்குவார்கள்
பைக்கைக் கொளுத்துவார்கள்
கடைகள் மூடியிருக்கும்
தெருவில் குழந்தைகள் விளையாடுவார்கள்
ரோலர் ஸ்கேட்டிங்க் கூட போவார்கள்
ஆம்புலன்ஸ் மட்டும் ஓடும்
அதையும் திறந்து பார்ப்பார்கள்
ஹோட்டல் பஸ், டூரிஸ்ட் பஸ் ஒரு இடத்தில் இறக்கிவிட
ஏர்ப்போர்ட்டில் இருந்து சுமையை உருட்டிக் கொண்டு
நடந்தவர்கள் உண்டு
முந்தைய நாள் சுமையை வைத்துவிட்டு
மறு நாள் நடந்து சென்று விமானம் பிடித்தவர்கள் உண்டு

ஆனால் நேபாளத்தில் வாழ்ந்தவர்கள்
எங்கேயும் ஜெயிப்பார்கள்
எதற்கும் அலட்டாத வாழ்க்கை
வண்டி இல்லையா?
சரி நடை!
மின்சாரம் இல்லையா?
சரி இருளில்!
தண்ணீர் இல்லையா?
சரி துணி அடுத்த வாரம் துவைக்கலாம்
எங்க அலுவலகமும் நேபாள சூழலுக்கேற்ப இயங்கும்
சுமார் பந்த் … 4 கிமீ நடந்து வருவோம்
கெடுபிடி பந்த்…வீட்டிலிருந்தே வேலை பார்ப்போம்(!!!)

இப்படி அடிக்கடி உப்புசப்பில்லாத பந்த் எதுக்கு? இதனால நீங்க சாதிப்பது என்ன?

மாத்தி யோசிங்க. . .அண்ணாஸ்

சரி இப்பவாவது ஏன் பந்த் ன்னு கண்டுபிடிக்கலாம்னு கூகுள் சர்ச் செய்தால்…”Welcome to Nepal “http://www.nepalbandh.com/” Bandh events in Nepal… என்று ஒரு வெப்சைட்..பந்த் ஒரு Event ……நாங்க எங்கேயோ போய்ட்டோம் இல்ல?

Rastriya Prajatantra Party Nepal RPP-N organised today’s bandh as part of its agitation demanding timely promulgation of constitution, end of current problems like load shedding and the current political deadlock and referendum on some key issues to be incorporated in the new constitution including constitutional monarchy, Hindu nation and federal republic.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s