அப்பா என்றால் அன்பு

எங்கள் மூவரையும்விட

எங்கள் குழந்தைகள் உரக்கச் சொல்வார்கள்
4 பேரும் அப்பாவுக்குச் செல்லம்
தக்ஷ் கேட்கவே வேண்டாம் அவளுக்கு அம்மாவே தாத்தாதான்
முழுக்க முழுக்க அப்பாவின் அன்பு அரவணைப்பிலேயேதான் வளர்ந்தாள்


நம்மப் பாப்பாதான் நல்லப் பாப்பா! எங்க அம்மை மாதிரி வருமா? எங்க அம்மைக்குதான் யோகம்! என்றெல்லாம் அப்பா அவளைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்
ஏ குருவி! சிட்டுக் குருவி! இங்க வா குருவி! என்று ஒரு பாட்டு இருக்கு தக்ஷ் குட்டிக்காக

தினம் தினம் தூங்கும் முன் தக்ஷ் க்கு 3 கதை சொல்லவேண்டும். கேரக்டர் பெயர் கூட ரிப்பீட் ஆகாமல் தினம் தினம் புதுப்புது கதை சொல்ல வேண்டும்

அவர்கள் விருப்பத்திற்கேற்ப அப்பா என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்

கூட விளையாடுவது, குதிப்பது, குதிக்க வைப்பது
பின்னாடியே சென்று பிடித்ததை ஊட்டுவது
கேட்டதை வாங்கித் தருவது என்று ஏகப்பட்ட செல்லம்

ஏதாவது சும்மா அடி பட்டுவிட்டால்
எங்களிடம் கோபிப்பதுபோல அப்பா ஏதாவது சொல்ல வேண்டும்
அப்பதான் கொஞ்சம் அழுகை குறையும்
அதுக்கும் மேல் … “மத்த பாப்பா இந்நேரம் விழுந்திருக்கும்
நம்ம பாப்பாவா இருந்ததுனால நல்லா பேலன்ஸ் பண்ணிருச்சு” என்று சொல்வார்கள்

தக்ஷ் சில நேரம் வலி போன பின்பும் தாத்தா வரும் வரை தொடர்ந்து அழுவாள் அல்லது ரி-ஸ்டார்ட் செய்வாள்

அப்பா என்றால் அன்பு:
எங்கள் ஊரிலும், எந்த ஊரிலும், இந்த உலகில் ஒரு முறை அப்பாவைப் பார்த்த யாரிடமும் இது பொருந்தும்
அப்பாவால் முகவரி பெற்றவர்கள் 300 பேராவது
அப்பா நட்டு வளர்ந்த மரங்கள் குறைந்தது 200
அப்பாவால் மிளிரும் பூங்கா எங்கள் நகரில்

அப்பா வேலிக்கு நட்ட கட்டையும் முளைத்ததால்… அப்பாவிடம் வந்து செபித்து செல்லலாமோ என்றார் ஒரு அடுத்த தெரு ஆசிரியை

ஊருக்கே உழைத்து உருகும் அப்பாவால் அம்மாவுக்கு எல்லா வேலையும் 100 மடங்கு கூடும் ஆனால் அம்மா அப்பாவுக்காக எல்லாம் பொறுப்பார்கள். முன்பு அமைதியாக… இப்போதெல்லாம் அவ்வப்போது கொஞ்சம் “ஏன் தான் இப்படி இருக்கீங்களோ…முடியல!” என்றாலும் தொடர்ந்து அதே அன்போடு..

சென்னைக்கு எழும்பூரில் வந்து இறங்கியவர்கள் எங்கள் வீட்டு விருந்தோம்பலில் ஒரு வேளையாவது மகிழ்ந்திருப்பார்கள்
முழு நேர வேலை, மூன்று குழந்தைகள், கூடுதலாக நிரந்தரமாக வீட்டில் குறைந்தபட்சம் 4 உறவினர் . . . இதையும் தாண்டி … அம்மா திடீர் விருந்தினரை சமாளித்தார்கள்

அம்மா அப்பாவுக்காக!
புரிதலில். . .,
ஒருவருக்கு ஒருவர் ஒளி சேர்த்து ஒளிர்தலில் அப்பா-அம்மா அற்புத இணை

மூணும் பெண்ணா?
என்று கேட்பவர்களே அதிகம்!
மூன்றும் மூன்று முத்துக்கள் இப்படி எங்களை வாஞ்சையுடன் சொன்னது அப்பாவுடன் பணிபுரிந்த நண்பர்தான்

அப்படி எங்கள் மூவருக்கும் கிடைத்த பெயருக்கும் புகழுக்கும் அப்பா-அம்மா வே முழுமுதற் காரணம்

என்ன விருப்பமோ படிக்கலாம்… என்ன வேலை என்றாலும், எந்த ஊரிலும் போகலாம்! நாங்கள் இருக்கிறோம்! நீங்கள் சென்று வென்று வாருங்கள் என்று வாழ்த்தி எங்களை வளர்த்து போதாது எங்கள் நான்கு செல்வங்களையும் பேணி இன்னும் பெற்றோர் பணி தொடர்கிறார்கள் !

ரிடையர்டு ஆன பிறகும் அம்மா அப்பாவுக்கு ஓய்வு இல்லை உங்களால் என எங்களைச் செல்லமாகக் கடிந்து கொள்வார்கள் எங்கள் உற்றார்-உறவினர்

பெரியப்பாதான் எனக்கு luck இது சித்தப்பா மகள் சொல்வது!
அப்பா எல்லோருக்கும் lucky star with his total positive energy!

பின்வருவது… 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை
(ஏதோ பேச்சுப் போட்டிக்கு யாரோ எழுதித் தந்த மனதில் நின்ற சில சொற்றொடர்களால் எழுதியது)

பரிதி அவன் பட்டொளிக்குப் போட்டியோ?
எந்தை நின் அன்பு ஒளி
மெழுகென உருகி உள்ளொளி பெருக்கினீர்!
சந்தனமெனத் தேய்ந்து மணம் பரப்பினீர்!
மெலியோர் சிலரை வலியோர் ஆக்கினீர்!

அப்பா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்னொரு எழுபது கண்டால்… சில கோடி மரங்கள் கூடி பூமி குளிருமல்லவா

Advertisements

6 thoughts on “அப்பா என்றால் அன்பு

  1. WOW BU!! Tears filling my eyes while reading this… Every word in this is true. Though i dont write like you, I feel equally and more than this. Appa is a real treasure for all 3 of us…. not just the 3 of us… for everyone around us too…. GREAT APPA!! LONG LIVE APPA!!

    WISH YOU A VERY HAPPY BIRTHDAY APPA!

    Love You Amma and Appa…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s