காதலர் மாதம் (!)(?)

காதலால் பிறந்தோருக்கும்
காதலால் வளர்ந்தோருக்கும்
காதலால் சேர்ந்தோருக்கும்
காதலால் பிரிந்தோருக்கும்
காதலில் கிறங்கியிருப்போருக்கும்
காதலில் உறங்கியிருப்போருக்கும்
காதலில் கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ் தாண்டி தெய்வீகம் தேடுவோருக்கும்
காதல் மாயை என்று சொன்னாலும் அதில் திளைத்திருப்போருக்கும்

சொல்லாத காதலே சுகம் என சுமந்திருப்போருக்கும்
ஈர்ப்பு ஒரு பக்கம்; இருப்பு ஒரு பக்கம் என இழுபடுவோருக்கும்
‘கற்பு-களவு’ இரண்டு வாழ்க்கையிலும் அசராமல் காதலிப்போருக்கும்
பதிவுத் திருமணம் செய்து பதுங்கி வாழ்பவருக்கும்
திருமணமே செய்யாமல் ஊரறிய சேர்ந்து வாழ்வோருக்கும்

அம்மா அப்பாவுக்காக காதலை இழந்தவருக்கும்
காதலுக்காக அம்மா அப்பாவை இழந்தவருக்கும்
வசதியான வாழ்வுக்காக காதலை இழந்தவருக்கும்
வசதியான காதலுக்காக வாழ்வை இழந்தவருக்கும்
அன்றாட சண்டையில் காதலைப் புதுப்பித்தவருக்கும்
சண்டையே போடாமல் காதல் முறிந்தவருக்கும்
முதல் காதல் வருமுன் முதுமை கண்டோருக்கும்

காதல் வேறு கல்யாணம் வேறு என்ற ‘தெளிவு’ பெற்றவருக்கும்
மெய்க் காதலில் மெய் மறந்து, மெய் சேர்ந்து, மெய்ப் பொருள் கண்டோருக்கும்
பொய்க் காதலானாலும் பொழுது போக்கி போரில்லா பூமி படைத்தோருக்கும்
3 காதலருடன் ஒரு காதலர் தினத்தை கொண்டாடும் காதல் வளம் மிக்கோருக்கும்
காதலை அறியாமல் காதலர் தினம் மட்டும் கொண்டாடுவோருக்கும்
காதலை உணர்ந்து தினம் தினம் காதலர்-தினம் கொண்டாடுவோருக்கும்

வாழ்த்துக்கள்

Advertisements

9 thoughts on “காதலர் மாதம் (!)(?)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s