ஆனால் . . .

அவசர வேலை!
நாட்டம் மற்றதில்!

அவசியம் அது!
பிடித்தது இது!

அருகே உணவு!
இல்லை பசி!

நடுக்கும் பசி!
இல்லை உணவு!

நடுக்கும் பசி! அருகே உணவு!
இல்லை உண்ண நேரம்!

பணம் உண்டு!
வாழ மனம் இல்லை!

வாழ மனம் உண்டு!
பணம் இல்லை!

உத்திரவாத உறவு!
உறவாடலில் சலிப்பு!

உறவில் உண்மையாய்!
உடனே விரிசல்!

ஊர், பேர் தெரியாது!
உண்மை நேசம்!

வெளியே பாராமுகம்!
உள்ளே ஈர்ப்பு!

உள்ளே ஈர்ப்பில்லை
வெளியே இன்முகம்

உலுக்க ஏதும் இல்லை!
உறக்கம் வரவே இல்லை!

உறங்க நேரம் இல்லை!
கிறக்குகிறது உறக்கம்!

Published by அம்மாமகள்

பசுங்கிளி-மகாலிங்கம் அவர்களின் மகள்; தட்சிணாவின் அம்மா; மகி, மாலினிக்கு சகோதரி; விச்சு-ரித்துவுக்கு சித்தி; அமித் குட்டிக்கு பெரியம்மா. ஊர் சுற்றும் நேரங்களிலும் உருப்படியாக ஏதாவது பகிர-பதிய விருப்பம். எனக்கென ஒரு இடம். அம்மா-மகளுக்காக அவர்கள் இருவரின் பெயரிலேயே எழுதுகிறேன். அம்மா இப்போதே படிப்பார்கள். மகள் எப்போதாவது படிப்பாள்-நம்புகிறேன்!

ஆனால் . . .” இல் 3 கருத்துகள் உள்ளன

பின்னூட்டமொன்றை இடுக