ப டி ப் ப டி யா . . .

திறமைசாலி!
அறிவாளி!
ரொம்ப நல்ல மாதிரி!

ப டி ப் ப டி யா

நோகடிக்க

நல்ல சம்பளம்
சுமாரான வேலை
என்ன வேலைன்னே புரியாது
எதுக்கு சம்பளம் தெரியாது
விவரம் தெரியாது குதிக்கும் தலை

தலையாகும் கலை கற்றால் பின்
வேலையோ, வேலை ஆளையோ கற்க வேண்டாம்
வேண்டும் இயந்திர உழைப்பு
கூடாது தலையை விட புகழ்
தாமே புரிந்துணர்ந்து பிறர் புகழ்ந்தாலும்
தலை கூடுதலாகக் குதிக்கும்! பயத்தில்!!!!

சாகடிக்க

ரொம்ப நல்ல சம்பளம்
உதவாக்கரை வேலை
எப்போதும் ஏதாவது செய்வதுபோல் காட்டி
செய்ததை, செய்யாததை எழுத்திலும், பேச்சிலும் எடுத்தியம்பல்
விவரம் தெரியாது குதிக்கும் தலையோடு முன்னுக்குபின் முரணான பெருந்தலை

படி ப் ப டி யா

நல்லா இருந்த முடி நரை முடியாகும்
சில நேரம் காணாமலும் போகும்
ஏன் இப்படி எனக் கலங்கும் அன்பர்களிடம்
தலை தப்பியதே புண்ணியம்
வேலை அழுத்தம் எனச் சொல்லி முடிக்கும் முன்
இப்படி ஒரு வேலை உன் முன் புண்ணியம் என்பர்
இது ஒரு வளமான வேலை; வளம் தரும் வேலை
ஒரு வேளை உண்மைதானோ?! அதுதான் வெளியேறவில்லை போலும்!

தள்ளுற வரைக்குத் தள்ளும்படி ஒலிக்கும் குரல்கள்
படிப்படியாக உள்ளேயும் ஒலிக்கத் தொடங்கும்
இதைவிட கொடுமையான வேலையில் உள்ளவர் அருகில்
வேலை தேடியே வாழ்க்கையைத் தொலைத்தவர் எதிரில்

பலரின் ஆண்டு வருமானம் நம் மாத வருமானம்
செலவுச் சுழலில் மாட்டியாகிவிட்டது
மன நிறைவு தந்த முன்னாள் வேலைகள்
கொட்டித் தந்தது நமக்கல்ல
பண நிறைவாவது மிஞ்சும்போது
கொஞ்சம் நிம்மதியை இழந்தால்தான் என்ன?

ஏதாவது “நாமே, சொந்தமாக” … ‘காட்சியே’ கிடைக்காது
எப்படி, எதை, எங்கே, எதற்காக, எதை முதலாக வைத்து
எதை எதிர்பார்த்து, எத்தனை நாளில்…, எவ்வளவு வருமானம்
யாருக்காக, யாருடன், யார் மூலம், யார் தயவில்

நிக்குமா, சாயுமா, ஓடுமா, படுக்குமா
கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்வரைகூட
தேவை நிலையான வருமானம்
ரூம் போட்டு யோசிக்கக்கூட
தேவை நிலையான வருமானம்

கடவுள் பூமி வந்தாலும் தன் தகுதிக்கேற்ற வேலை
தேடிக்கொண்டுதான் இருப்பார்
நிலையற்ற உலகில் நிலையான வேலை
அதைவிட முக்கியம் நிலையான வருமானம்

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!

திறமைசாலி!
அறிவாளி!
ரொம்ப நல்ல மாதிரி!

Caution: Any resemblance purely coincidental

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s