தேசம் கடந்த நேசம் Nepal-Pakistan-India


உடன் ப(ய)ணித்த இருவர்!
இவர்களால் நான் தொலையாதிருந்தேன்
உலகையே அரவணைக்கும் எல்லையற்ற அன்பு
உயர் பணித்தரம், உண்மை, எளிமை, நேர்மை, நேசம்
இருவர் முன்னும் நான் மழலைதான்
நண்பராய் வந்தனர் – நின்றனர்
அன்பு, ஆதரவு, அறிவுரை
ஆலோசனை, பேணுதல் எல்லாம்
கேட்டபோதும், கேட்காதபோதும்;
தேடியபோதும், தேடாதபோதும்;
விழிக்குள் வைத்துக் காத்தனர் காக்க
இறைவனே அனுப்பிய தூதராய் இயங்கினர்
தந்த மணித்துளிகள் எல்லாம்
தன் சொந்த மணித்துளிகளே
பரிவு இவர்கள் பணித் தேவை இல்லை
பயன் எதுவும் என்னால் இவர்களுக்குத் துளியும் இல்லை
ஆனாலும் நின்றனர் உறுதுணையாய்

இவர்க்ளுக்கும் இடர் உண்டு
என்னைத் தடுமாற்றும் பலவும் பொதுவானவையே
உறுத்தும் எதையும் பெரிதாக்கவில்லை
வருத்தும் துயரை வெளிக்காட்டவில்லை
வெறுப்பே இல்லை இருவரிலும் -இருந்தாலும்
உமிந்தததில்லை-அமிழ்ந்த இடம் அறியவில்லை
கடுஞ்சொல் இல்லை; பழித்தல் இல்லை
வருத்தியவரை வருத்த நினைத்துமில்லை
அறிவின் ஒளிசூழ் பெரியோர் ஆயினும்
முட்டாள் தலைமையில் முகம் கோணவில்லை
பார்ப்பதெல்லாம் ரசித்து
குழந்தைகளோடு கும்மாளமிட்டு
பாடியும் ஆடியும் ஓடியும் ஒருவர்
உச்சி முதல் பாதம்வரை
வீட்டை அழகு செய்து
குழந்தைகளைக் குளிர்வித்து
சலிக்காது விருந்தோம்பி
பணி சுழற்றினாலும்
தலைமை பந்தாடினாலும்
புலம்பாது உற்சாக மழையே பொழிபவர் ஒருவர்

ஆயுத வணிகமும்
உலக அரசியலும்
கூடித் தொடுக்கும் வீண் போர்கள்
அன்றாட சண்டைகள்
உள்ளூர்க் கலவரங்கள்
அநியாய உயிரிழப்புகள்
அழிபடும் அழகு பூமி
எங்கு பார்க்கினும் அதிகார மோகம்
பொய்யும் புரட்டும் ஒவ்வொரு அசைவிலும்

ஆனால் …
இவர் இருவர்
இவர் போல
இன்னும் பலர்
உலக வாழ்வில்
நம்பிக்கையை
உயிர்ப்பிக்கிறார்கள்
நீடுழி வாழ்க இருவரும்
நலம், வளம் எல்லாம் பெற்று

தேசம் கடந்த நேசம் …. தொடர்ச்சி

மாதுரி திதியின் பின்னால் நிற்பது அவர்கள் அண்ணன் மகன் கல்யாண் பக்த மாத்தேமா செல்லப் பெயர் Bunty. இவர் 25 வயதுக்குள் தன் முதுகலை சமூகவியல் படத்தையும் தாண்டி உலகின் Identity-based movements குறித்து அலசி ஆராய்ந்துவிட்டார். Comparative Relgion -another pet topic. இவருக்குத் தெரியாத மதம், ஆன்மிகம் தொடர்பான கருத்தாக்கங்கள் இல்லை. இந்த வயதில் இவ்வளவு ஞானமா என பார்க்கும்போதெல்லாம் அதிசயிக்க வைக்கிறார். "நிறை குடம் ததும்பாது" என்பது போல் அமைதி, குழந்தைத் தனம். இவர் படித்த புத்தகங்கள் பல நூறைத் தாண்டி! எனக்கு OSHO புத்தகங்கள் பிடிக்கும் என்றதும் கொஞ்சம் அள்ளிக் கொண்டு வந்து தந்தார். இல்லாத Collection இல்லை. இவருக்கு சென்னையிலிருந்து என் உறவினர் அனைவரும் வரும்போது ஒரு பை நிறைய ராமகிருஷ்ண மிஷன் பதிப்பகத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய Cultural Heritage of India என்ற தொகுப்பு வந்து சேர்ந்தது. படித்தது போக இன்னும் படிக்க வேண்டியது என்ன என்ற தெளிவான பட்டியலும் இவரிடம். தற்போது ஷீர்டி சாய்பாபாவின் சாய் சரிதம் படிக்கிறாராம். வீட்டின் நூலகத்தில் இடம் போதவில்லை. இப்படி ஒரு அற்புதப் பிறவி நாளைய நேபாளத்தின் நம்பிக்கை நட்சத்திரம். இவ்வளவு சின்ன வயதில் இப்படி ஒரு இளைஞரைப் பார்க்கிறோமே என நினைத்தால் மாதுரி திதி You have to be indpendent. Start earning என்று இவரை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பொருள் ஈட்டும் பணி வாய்ப்புகள் இவருக்கு ஏற்றபடி அமைய வேண்டும்தானே. அரசியலும், குளறுபடிகளும் பெருகிய பணிச்சூழல்…இப்படி ஒரு இளைஞரை என்ன செய்யும்? இப்படி ஒரு நியாயமான கவலை யோசிக்கும் போதே…Lifetime scholarship scheme ஏதாவது இருந்து அது கிடைத்தால் இப்படிப்பட்ட அசாதாரணமானவர்கள் தப்பிப்பார்கள்தானே!!! இவர் ஆய்வு வழிகாட்டி செளபாக்ய ஷா என்ற மனிதரும் ஒரு மேதை. கல்யாண் ஆய்வுக் கட்டுரையை செம்மையாக்கி இறுதி செய்து மறுநாள் பணம் செலுத்திவிட்டுக் கொண்டு வா கையெழுத்திடுகிறேன் என்று சொன்னவர் அதே மறுநாளில் 44 வயதில் அகால மரணம் அடைந்தார். இந்தப் பேரிடிக்குப் பின் அடுத்து என்ன என்ற தடுமாற்றம். ஆனாலும் தன் வழிகாட்டியின் தனித்துவத்தைப் பற்றியே இடைவிடாது என்னிடம் சொன்னார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று திரிபுவன் பல்கலைக்கழகத்தில் விசாரிக்க வேண்டும் என்று நிதானமான பதில். இவர் தந்தை கேதார் பக்த மாத்தேமா அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். அவர் ஓர் ஒப்பற்ற மனிதர்-எளியர்-நேர்மையாளர். அதனால் Buntyக்கு பிற மாணவர்களைக் காட்டிலும் கூட சலுகைகள் குறைவுதான். மற்றபடி… எப்படிப் பார்த்தாலும், தாங்கும் திறனுக்கு ஏற்பத்தான் இடர்கள் வருமாம்! இதையும் தாங்க இவரால் முடியும். இந்த அனுபவம் தந்த வலிமையுடன்…இதையும் தாண்டி இவர் வெற்றி பெறட்டும்!

More pictures Mrs&Mr Muhammad Ali with their daughter Konain

Mrs. Ali, Hunain, Konain, Madhuri Didi and Husnain

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s