வெளிப்படை?!?

எல்லாரையும் நம்பலாம்
எல்லாரையும் நம்பக்கூடாது
யாரையும் நம்பக்கூடாது
கடவுளை மட்டுமே நம்பலாம்

ஒவ்வொரு மாற்றமும் வலிக்கிறது

ஒளிவு மறைவே இல்லை!
ரொம்பவே வெளிப்படை!
இதனால் என்ன பயன்?
இப்படிக் கணக்குப் போட்டதே இல்லை
ஒவ்வொரு முறையும் பாடம் கற்கிறேன்
கற்ற பாடத்தைத் தொடர்ந்து மறக்கிறேன்
இயல்பான இயல்பை ஏற்காத உலகம்
ஆனால் உலகத்தின் இவ்வியல்பை ஏற்றே தீர வேண்டும்!
கடவுளே! இதென்ன நியாயம்?
இப்படி நியாய அநியாய அலசலிலேயே
இழந்தாயிற்று பாதி வாழ்க்கை
மீதி வாழ்க்கையாவது
நிம்மதியாக..என்ன தேவை?
தெரியும்! ஆனால் முடியாது
என்ன பிம்பம் பதிகிறது? என்னைப் பற்றி
கவலைப்பட்டதே கிடையாது!
சொல்லணும்னு தோணிச்சு!
சொல்லியாச்சு! அவ்வளவுதான்!
குளிர வைக்கும் கலை கற்கவே இல்லை
அரசியல் அறவே புரியாது!
பொய்யும் நடிப்பும் முடியாது!
சூழல் நேரம் அறிந்து பேச வேண்டுமாம்
உயற்வு நவிற்சி உருவாக்கம்!!
நான் அந்நேரம் மெளனம் காத்திருப்பேன்
இயல்பு நவிற்சிகூட இயம்பப்படவில்லை!
கோட்டை கட்டும் வாய்ப்பெல்லாம்
கோட்டை விட்டு விட்டு
பைசா பெறாததற்கெல்லாம்
மூச்சைக் கொடுத்து உழைப்பு
மற்றவர்கள் பார்வையில் இப்படி
ஆனால் என்னை அது ஈர்த்திருக்கும்
நானும் அதில் கரைந்திருப்பேன்
என் மகள் சரியாக முடிவெடுப்பாள்
எனக்கோ தடுமாற்றம்
என் வயதில் நான்கில் ஒரு பங்கு
அவளின் தெளிவு, விவரம்
எனக்குப் பாதிகூட இல்லை
பொறுத்திருக்க… முடியாது!
அமைதி காக்கத் தெரியாது!
எல்லாம் இங்கேயே இப்போதே தான்!
எனக்காகக் கடவுள் over-time உழைக்கிறார்!
ஆனால் அவராலும் முடியவில்லை!
என்னை எப்போதும் முழுமையாய்க் காக்க !!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s