அதோ…!

பதினான்கு ஆண்டுகள்! பணி தொடங்கி
பதினான்கு மாதங்கள்! இந்திய எல்லை தாண்டி
பல நூறு முகங்கள், முகவரிகள்
எட்டில் ஒரு பங்கு உலகே
இத்தனை பெரிதா?
புதுப்புது நண்பர்கள்
திக்குமுக்காடுகிறேன்
வேலைக்காக மட்டும்
பழகிப் பழக்கம் இல்லாததால்
ஆனால் அன்புக்குப் பஞ்சமில்லை
சொல்லவா வேண்டும்? -தெற்காசியா!
அழைப்புகள், விருந்துகள்
உடன் ஊர் சுற்றல்
கூடியிருந்து குளிர்தல்
பரிசுகள், சிரிப்புகள்
வாழ்த்துகள், கைகுலுக்கல்கள்
அணைப்புகள், முத்தங்கள்
நேசம், பாசம்
எதற்கும் குறைவில்லை
இந்த ஊரின் அணைப்பு எப்படியோ?
நிற்கலாமா? ஓடிவிடலாமா?
தடுமாறியதும் உண்டு!
பார்த்த நாடுகள்
இந்தியரைக் கண்டபடி நேசிக்கும் ஆஃப்கானிஸ்தான்
உடன்பிறப்பு உணர்வு நிறை பாசாங்கில்லா பங்களாதேஷ்
தென்னிந்தியாவை நேசிக்கும் நேபாள்
தூய்மை-அழகும், தமிழும் நிறைந்த ஸ்ரீலங்கா
தெற்காசியா தாண்டி …
தகதகக்கும் தாய்லாந்து
தமிழ் மணக்கும் மலேஷியா

…..

பணி நிமித்தம் சில தொடர்புகள்
பதவி, பணி தாண்டியும்
உயிர்ப்பில் சில உறவுகள்
ஒத்த அலைவரிசையில்
எண்ணங்கள், ஏக்கங்கள்
கனவுகள், இலக்குகள்
நம்மையே பிரதிபலிப்போர் சிலர்
விட்டகுறை தொட்டகுறையோ
எனும்படி சில திடீர் மின்னல்கள்
போகிற போக்கில் தடம் பதிப்போர் சிலர்
சிலையாய் நெஞ்சில் உறைவோர் சிலர்
சிலரிடம் உணர்வுப் பொருத்தம்
சிலரிடம் உற்சாகப் பொருத்தம்
சிலரிடம் கேலி-கிண்டல் பொருத்தம்
அடுத்த முறை பார்க்கும்வரை
அப்படியே உறைந்திருக்கும்
பிம்பங்கள், உணர்வுகள்
செதுக்கி வார்ப்போரும் உண்டு
கண்மணியாய்க் காப்போரும் உண்டு
சேர்ந்து வளர்வோரும் உண்டு
கூடிக் கற்போரும் உண்டு
சும்மா பேசிக் களிப்போரும் உண்டு

தனியாய் வந்த பெண்
தாங்குகிறார்கள்
எனக்கு மட்டுமல்ல
என் மகளுக்கும் உண்டு
இங்கு நேயர்கள்
நேபாளம் வந்த என் பெற்றோரை
வணங்கி வரவேற்க
வீடு தேடி வந்த இரு (வெவ்)வேறு தேச நண்பர்கள்

இந்திய எல்லையைத் தாண்டியவுடன்
எல்லோருக்கும் பிடிக்கிறது
தமிழ் முகம்
தமிழ் குணம்
தமிழ் மணம்
நம்மை ரசிப்பவர்கள்
தயங்கமால் சொல்லியும் வைக்கிறார்கள்
எதுவாயினும்
செயலின் செம்மை, நேர்த்தி
ஆளுமை, ஆற்றல்
உற்சாகம்
எடுத்தியம்பும் திறன்
கருமை,கண்கள்
வளர்த்தி, கூந்தல்
சேலை, பொட்டு
சிரிப்பு, பேச்சு

ஏன்? உப்புமா கூட பிடிக்கிறது

இட்ட பணி மட்டுமில்லை
இடையிடையே Goodwill Ambassador
ஓய்விலும் விழிப்பு
கூட்டத்திலும் தனிமை
அதோ..! அடுத்த அலை!
ஆயத்தம்…! அடுத்த அறிமுகத்துக்கு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s