Jiju நாய்க்குட்டி

விஷ்ருத் சின்னக் குழந்தையாக இருந்தபோது உருவான கேரக்டர் இந்த ஜிஜ்ஜூ நாய்க்குட்டி. இது நிறைய குழந்தைகளைக் கவர்ந்த கதை. (என் கற்பனையில்தான் உருவான கதை+பெயர்)

இப்போது ஜிஜ்ஜூ என்ற ஒரு கேரக்டர் நிஜமாகவே மகீ வீட்டில். இனம்-டாபர்மேன் (Doberman)

விஷ்ருத் மட்டும் ஸ்கூபி (Scooby) என்ற பெயரைச் சொன்னானம். எல்லோரும் சேர்ந்து Jiju வுக்கு ஓட்டளித்திருக்கிறார்கள்.

மகீ என்னிடம் Doberman என ஆன்லைன் சாட்டில் சொன்னவும் நான் Dalmatian எனக் கற்பனை செய்து கொண்டு கருப்பு வெள்ளை நிறமா என ஒரு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டேன். நல்ல வேளை மகீ கண்டுபிடிக்கவில்லை….ரெண்டும் D தானே…போனாப்போகுது விட்டுடு மகீ. விஷ்ருத் கிட்ட இத சொன்னா எப்படி சிரிப்பான்…கற்பனை செய்கிறேன்

ஆனா நானும்தான் சிரித்தேன் Bubblie….
…. விஷ்ருத் கட்டிலிலேயே ஜிஜ்ஜூ தூங்கப்போக..அவனுக்கு லேசாகப் பயம் வந்ததாம்…Nepal special sleeping bag க்குள் படுத்துத் தூங்கினானாம். இது எப்படி இருக்கு??? ஜிஜ்ஜூ ஏதோ மூட்டைன்னு நினைத்து உருட்டித் தள்ளாதவரை சந்தோஷம்

தக்ஷ் பேரன்பில் ஜிஜ்ஜூ வே உருகுதாம். அவள் மடியிலேயே நேற்று தூங்கியதாம். பரவாயில்லை…தக்ஷ் அன்பு காட்ட ஒரு புது ஜீவன் அவள் அருகில்.

ரித்து கொஞ்சம் ஓடுவதால் அவளைத் துரத்துகிறதாம்

அமித் தூரத்தில் நின்றே பார்க்கிறானாம்

இரண்டே மாத சின்னக் குழந்தையானாலும் கொஞ்சம் கனத்த பெரிய உருவமாம்

என் அக்கா இதற்குள் இணையத்தில் தேடிப்பிடித்து ஜிஜ்ஜூ வுக்குப் பிடித்த உணவெல்லாம் தயாரிக்கத் தொடங்கியிருப்பாள்…அல்லது பசுமை விகடன் மாதிரி ஏதாவது ஒரு லொள்/மோப்ப விகடன் இருப்பதைக் கண்டுபிடித்து வாங்கத் தொடங்கியி அதன்படி பராமரிக்கவும் தொடங்கியிருப்பாள்

எனக்கு அவள் அன்போடு செய்து கொடுத்தனுப்பிய மற்றி, முறுக்கு என்ற இரண்டு நொறுக்குமே சூப்பர். எப்படி அவளுக்கு மட்டும் இவை எல்லாம் செய்ய மனமும், தெம்பும் வருகிறது???

அசர வைக்கும் அசுர சாதனைகளுக்கு அடையாளமாகி… எளிதில் வேலை செய்து திருப்தி படுத்தமுடியாத அம்மாவே நிமிடத்துக்கு ஒரு முறை மகீ அக்காவின் பெருமையைப் போற்றுகிறார்கள்

இந்த ஜிஜ்ஜூ நாய்க்குட்டியால் அக்காவுக்கு வேலை சுமை கூடிவிடும் என்பதே அம்மாவின் வருத்தமாம். ஆனால் விஷ் & தக்ஷ் பெருமளவில் உதவுவார்கள் என்பது அக்காவின் நம்பிக்கை

மற்றபடி நமக்கு வலைப்பதிவுக்கு நிறைய மேட்டர் கிடைக்கும் போலிருக்கு….வருக வருக ஜிஜ்ஜூ நாய்க்குட்டி அவர்களே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்களோடு சேர்ந்து “ஐவரானோம்” என நால்வரும் சொல்வார்களாக!!!

அவ்வப்போது வந்து போகும் என்னிடமும் ரொம்பக் குரைக்காமல் அன்பாக இருப்பீர்களாக! நான் உங்களின் ரொம்ப அன்புகாட்டும் தக்ஷ் குட்டியின் அம்மா!!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s