பங்களாதேஷ்!

Hello Bhuvana,

It has been long time I say hello to you.
How are you? Hope you are fine and having a very busy time over there.
How is Dakshina? Is she with you?
Samarah is fine . She has started to call me “mum-mum”. It’s amazing……. I can’t explain how I feel.
Please make a plan to visit Bangladesh with Dakshina. We miss you.

Best regards,
Sanjida

இது ஒரு சான்று: இது போல் இன்னும் பல…பல இடங்களில் எளிதில் பார்த்து உணர முடியாத இதமான அன்பு, அக்கறை, நேசம், பாசம், பரிவு எல்லாம் இந்த பூமியில் அதிகம்

Bangladesh

 • உணர்வுபூர்வமான உற்சாகமான அன்புக்குப் பஞ்சமில்லை. கொஞ்சம் தமிழர்களை நினைவு படுத்தும் பரபரப்பான பாச உணர்வுகளை இங்கு உணரலாம்; தட்ப வெப்பம், நிறம், உடை, அரிசி உணவு என பல பொருத்தங்கள் நமக்கும் இவர்களுக்கும்
 • போட்டி-பொறாமைகள் ரொம்ப இல்லாததால்தானோ என்னவோ உலகத்தின் மிகப்பெரிய NGO அரசு-சாரா நிறுவனம் BRAC இங்கு உள்ளது.
 • தொழில் நேர்த்தி; சொல்லாததையும் குறிப்பால் உணர்ந்து செய்தல் இங்கு உண்டு; பணிவானவர்கள்; அன்பானவர்கள்; மக்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பெரிதாக எதுவும் இல்லை. பகைமை உணர்வுகள் குறைவு; சகோதரத்துவம் அதிகம்!
 • பின்னுதல், முடைதல், தைத்தல், நெசவு, வடிவமைப்பு, மூங்கில் கட்டிடங்கள், படகுகள், முத்துக்கள் என பங்களாதேஷ் ஒரு கலை கைவண்ணக் களஞ்சியம்தான்
 • இங்குள்ள பருத்தித் துணிகள் உலகத் தரம் வாய்ந்தவை
 • கலை ஆர்வம் மக்களிடம் அதிகம்; ரவீந்திரநாத் தாகூரை ரபி என்று கொண்டாடுகிறார்கள். அவர் பாடல்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள். Romance, Melody என உருகுகிறார்கள். என் தங்க Bangla(desh), I love  you… என அவர்களின் தேசிய கீதமும் அவர் இயற்றியதுதான். உலகில் எங்குமே இப்படி ஒரே கவிஞர் இரு நாட்டின் தேசிய கீதம் எழுதியதில்லை என்றார் ஒருவர். மற்றவர்…அவர் எழுதும்போது இரண்டும் ஒரே தேசம் என்றார்…உண்மையிலும் உண்மை
 • Bengali Sweets கேட்கவா வேண்டும்? ரசகுல்லா என்பதை ரொஷோகோல்லா என்பார்கள். “கடைக்குப் போய் கால் கிலோ, அரைக் கிலோ இனிப்பு மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவதே எங்கள் மக்களின் வழக்கம். முதல் முறையாக நகரத்துக்கு வந்தபோது டாக்கா யுனிவர்சிட்டியில் யாராவது இனிப்பு வழங்கினால் ஒரே ஒரு இனிப்பு எடுத்துக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு வியப்பாக இருந்தது” -இது ஒரு சக பணியாளர் சொன்னது
 • பங்க்ளா (Bangla) என்று சொல்வதுதான் சரி Bengali என்பது ஆங்கிலேய பாணி என நினைக்கிறார்கள்… எனக்கு Learning Bengali என்ற புத்தகம் ஒரு அலுவலகத் தோழி ஒருவர் தந்தார். அது கொஞ்சம் கடினமாக இருந்தது. அவரிடமே தந்துவிட்டு இணையத்தில் ஒரு எளிய பக்கத்தில் கற்றுக் கொண்ட சொற்றொடர் ரொம்பவே உதவியது “அமி பங்களா ஜானி நா’ அதாவது எனக்கு Bangla தெரியாது. என்னைப் பார்த்து பங்களாதேஷி யாகவே பலரும் நினைத்ததால் மொழி தெரியாது என்ற போதுதான் உதவமுற்பட்டனர்
 • நமது ‘அ’ ஒலி எல்லாம் இங்கு ‘ஒ’ ஒலியாக மாறும்; ச எல்லாம ஷ வாக மாறும். உதாரணம் நமஸ்கார்-நமோஷ்கார்; ரசகுல்லா-ரொஷோகோல்லா. Shahid என்ற பெயரை ஷோஹித் என்று உச்சரிப்பார்கள். பேச்சில் அடிக்கடி, ‘ஓ’ ‘டி’ O அல்லது T சப்தங்கள் ஒலிக்கும். ஹிந்தி தெரிந்தால் ஓரளவு ஒப்பேற்றலாம். நிறைய ஒற்றுமைகள் உண்டு. நம்மைப் போல அழுத்தம், திருத்தம் அதிகம் பேச்சில்
 • Indo-Aryan Family of Languages இதில் ஹிந்தி, பங்களா, நேபாளி, உருது எல்லாம்..அதனால் ஹிந்தி தெரிந்தால் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் என நிறைய ஊரில் கொஞ்சம் கொஞ்சமாவது குப்பை கொட்டலாம்
 • ரமதான் நோன்பு மாதத்தில் அங்கிருந்தேன். இரண்டு மூன்று நோன்பு திறக்கும் இஃப்தாரி மாலை உணவைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். வறுத்தது, பொரித்தது, வெந்தது, பழம், பழரசம், இனிப்பு, வழக்கமான அசைவ உணவு என MORE THAN A PACKAGE.
 • நோன்பு திறக்கும் நேரம் ஊர் முழுவதும் Standstill! சின்ன்ச் சின்னக் கடைகள் வீதியோரம் … ஆங்காங்கே பணி புரிவோர் பசி தீர்க்க!
 • டாக்கா தவிர சிட்டகாங்க் மலைப் பகுதியில் ரங்காமதி, காக்ராசோரி என்ற ஊர்களுக்கும், கூரிகிராம் என்ற வெள்ள அபாயப் பகுதிக்கும் சென்றிருக்கிறேன். அந்த ஒரே மாவட்டத்துக்குள் 14 நதிகள்.  சிட்டகாங்க் பகுதியில் சக்மா, மார்மா, திரிபுரா, மணிப்புரி போன்ற பழங்குடியினர் வசிக்கிறார்கள். இந்து சமயம், புத்த சமயத்தைப் பின்பற்றுவோர் பலர் உண்டு
 • உணவு-உபசரிப்பு பிரம்மாண்டமாகவே இருக்கும். இனிப்பு, காரம், தேநீர் தவிர பழங்களை அழகாக நறுக்கிப் பரிமாறுவார்கள். மீன் வகைகள் அருமையாக இருக்கும். அன்றாடம் இவர்கள் உணவில் இடம் பெறும் பருப்பு, (பெரும்பாலும் மசூர் தால்) நம்ம ஊர் ரசம் போல திரவமாக இருக்கும். ஆனால் எளிமையான தோற்றம் மட்டுமல்ல சுவையும் நன்றாகவே இருக்கும்
 • ஊறுகாய், உருளைக்கிழங்கு மசியல் போன்றவற்றில் கடுகு எண்ணெய் மணம் தூக்கலாக இருக்கும். அதை ரசிக்கிறார்கள். நாம் நல்லெண்ணெயை ரசிப்பது போல!Culture of abundance amazing! Complimentary Broadband in all hotels; எங்கெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் கஞ்சத்தனம் இல்லாமல் தரமான சேவைகளைப் பார்க்கலாம்
 • எனக்கு வெளியே வாழ முடியும் என்ற நம்பிக்கை தந்த அன்பு மிகுந்த பூமி பங்களாதேஷ். 3 மாதங்களிலேயே நிறைய நண்பர்கள். மீண்டும் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். தமிழகத்தில் இருந்த உணர்வே இருந்தது

பங்களாதேஷ்….இன்னொரு பதிவு வரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s