அடி!

 “பிள்ளையை அடிக்காதப்பா!” தோழியிடம் சொன்னால்… உடனே பதில் வரும்: “என் பிள்ளை உன் பிள்ளை மாதிரி இல்லை!!”

 அடி அவசியமே இல்லை என்பது போல் தான் தக்ஷ் குட்டியின் பொறுப்பான நடவடிக்கைகள் பெரும்பாலும்! சில நேரம் கொஞ்சம் முரண்டு பிடிப்பாள்; அதுவம் என்னிடம் மட்டும்தான்! காரணம் பெரும்பாலும் எனக்குப் புரியும். என் நினைவில்… நான்கு முறை அனிச்சையாக  தட்டி இருக்கிறேன்.

 நான் Daksh குட்டியை அடித்ததே இல்லை என்ற போது அவள் இந்த புள்ளி விவரத்தை எனக்கு நினைவு படுத்துவாள்; “ஏழு வயது வரை 4 தட்டு என்றால் அது அடி என்ற கணக்கே இல்லை Daksh” இது நான் சொல்வது!: 

  1. மூன்றரை வயதில் அம்மா தனித்தனியாக காய வைத்த அரிசி, கோதுமை இரண்டையும் கலந்துவிட்டாள்; எனக்கு இல்லாத பொறுமையை வரவழைத்து நான் பிரித்துக் கொண்டிருந்த போது மீண்டும் கொண்டு வந்து போட்டாள்; நான் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே அவள் கையில் ஒரு தட்டு தட்டிவிட்டுத் தொடர்ந்து பேசினேன்; நான் பேசி முடித்தவுடன் கேட்டாள்; “என்னை ஏன் அடிச்சீங்க!”
  2. இன்னொரு முறை ரித்து கையை அவள் காலால் மிதித்த போது அவள் கால் மீது ஒரு தட்டு தட்டினேன்; அதையும் கணக்கில் வைத்திருக்கிறாள்;
  3. ஒரு முறை துணியை மிதித்துக் கொண்டிருந்த போது ஒரு தட்டு தட்டியவுடன் “ஏன் அடிச்சீங்க?” என்று கேட்டாள்; துணியை மிதிக்கிறியே Daksh என்றவுடன், “காலை எடுன்னு சொல்லுங்க! அதுக்கு ஏன் அடிச்சீங்க என்றாள்.
  4. அண்மையில் ரித்து வை அவள் தாக்கும் வேகத்தைப் பார்த்து மிரண்டு தடுப்பதாக நினைத்துக் கொஞ்சம் வேகமாகத் அடித்து விட்டேன். அழுது ஆர்ப்பாட்டம் செய்து அடித்து விட்டேன் என்று சென்னையிலிருந்து தொலைபேசியில் பேசிய பெரியம்மாவிடம் இருமுறை புகார் செய்தாள். இரண்டாவது முறை, “தினமும் அம்மா அடிக்கிறாங்களா?” என என் அக்கா கேட்டவுடன், ஒரு அடி இரு புகார் என சொல்லி விளக்கினோம்.” 

Daksh குட்டி ஒரு முறை, “நீங்க நல்ல அம்மா! ஏன்னா அடிக்கவே மாட்டீங்க என்று சொன்னாள்”.  மற்ற குழந்தைகள் அம்மாக்களிடம் அடிபடுவதைப் பார்த்து மிரண்டிருக்கிறாள்; “அம்மா முடியைப் பிடிச்சு இழுத்து சுவரில் முட்டினாங்கம்மா” என்றெல்லாம் பார்த்ததை என்னிடம் விவரித்திருக்கிறாள்.

அடி ஒரு அனிச்சை செயல் என்பதை குழந்தைகள் ஒருவரை ஒருவர் தாக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.                             

ஒழுக்கத்தைத் தர அடிக்கிறோம் என்றால். நம் ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிறது. நம் குழந்தைகள் ஒழுக்கம் கற்க “நம் நடத்தைதான் முதல் முன் மாதிரி!” Children learn from us and we model appropriate behaviour to them.  சில நேரம் நம்மைத் தவிர புறச்சூழலில் உள்ள நபர்கள், ஊடகங்களிலிருந்தும் அவர்கள் கற்கிறார்கள். அடி சரிதான் என்பதை நியாப்படுத்தும் காட்சிப் படிமங்கள் நம்மைச் சுற்றிலும்…

நான் சில நேரம் தக்ஷ் குட்டியை அடித்திருக்க வேண்டும். நான் அவளிடம் கத்தும், பேசும் விதம் சரியில்லை! இதற்கு அடியே பரவாயில்லை என்று அம்மா, அக்கா எல்லாம் சொல்கிறார்கள்.

கோபப்பட்டுவிட்டு பிறகு ‘Sorry Daksh’ என்று சொல்வது பழகிவிட்டதால், “அம்மா இப்ப சாரி சொல்லுவாங்க!” என்று Daksh சொல்கிறாள். 

கடுமையான வேலை; வேறு யார் மீதாவது வந்த கோபம், வெயில் எரிச்சல், உடல் நலம் காரணமாக இயலாமை, சில நேரம் வேறு எதிலாவது கவனம் வைத்து பிள்ளைகள் மந்தமாகும் போது, நமக்குக் கூடுதல் வேலை தரும்போது,.. இதுபோன்ற சூழல்களில்தான் அடி, கத்தல் எல்லாம். குழந்தைகளின் சேட்டைக்காக அவர்களிடம் நாம் கடிந்து கொள்வதைவிட சூழல் சரியில்லாததால் வேறு எங்கும் கொட்ட முடியாதததை அவர்கள் மீது நாம் கொட்டுகிறோம் என்பது ஒவ்வொரு முறையும் உணரும் உண்மை! 

பள்ளியில் அடி!

எத்தனையோ மிஸ் இருக்காங்கம்மா; ஆனால் தமிழ் மிஸ் ன்னு வர்றவங்க எல்லாம் அடிக்கிறாங்கம்மா! இப்படி ஒரு முறை சொன்னாள் Daksh! Computer Miss, ஆறு வயதுக் குழந்தைகளின் பிஞ்சுக் கையில் மெட்டல் ஸ்கேல் வைத்து அடித்தார்கள்; இயக்குநர் வரை புகார் சென்றது. நான் பதறிய அளவு தக்ஷ் குட்டியின் வகுப்பாசிரியையும் பதறினார். அவளை ஏன் அடித்தீர்கள் என என் சார்பாகக் கேட்டாராம் வகுப்பாசிரியை. வம்பு செய்தால் அடிக்கலாம். Daksh Ideal Girl என்பது வகுப்பாசிரியையின் நியாயம்! “எல்லோரையும்தான் அடித்தேன்! அவளையும் அடித்தேன் ” இது கணினி ஆசிரியை. வெறும் வாய்மொழிப் பாடமாக இருந்த கணினிப் பாடத்தில் அநாவசியமாக டிக்டேஷன் தந்து ஐந்துக்கு மூன்று மதிப்பெண் பெற்றால் அடி! பெற்றோரிடம் இந்த மதிப்பெண்ணுக்கு நேராகக் கையொப்பம் வாங்கி வராவிட்டால் அடி! Computer Miss, பிறகு தமிழ் மிஸ்; பிறகு Aunty எனப்படும் Caretaker பலமுறை … எத்தனை முறை சொன்னாலும் அப்பள்ளியில் அடியை மாற்ற முடியாமல், இப்போ பள்ளியையே மாற்றியாகிவிட்டது!                      

  1. பள்ளியில் அடி பற்றிய உலகளாவிய கருத்துக்களை விவாதிக்கும் வாய்ப்பு என் பணிகளில் அதிகம். ஆனால் இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பரிணாம வளர்ச்சி சார்ந்த விஷயம்.பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்லும் விஷயம் இல்லை. 
  2. அடி-உதை பண்பாடு சார்ந்த விஷயம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. Culture/civilization என்பதை Refined-behaviour எனப் பொருள் உணர்ந்தால் அடி-உதையைக் கலாச்சாரம் என்பது கேலிக்குரியது. பல கலாச்சாரக் குழுக்களிலும் பண்பட்ட மனிதர் என மதிப்பது ஆவேசம் இல்லாத அமைதியான மனிதர்களைத்தான்! 
  3. எங்கள் வீட்டில் நாங்கள் சகோதரிகள் 3 பேர். Nature Vs Nurture மூவருக்கும் பொது! அதாவது guided by more or less similar hereditary / environmental factors; ஆனால் குழந்தை வளர்ப்பது 3 விதம்…பிறகு எப்படி Asian Culture என்று பொதுப்படுத்தமுடியும்?

அடி குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பதற்கு Daksh என்னிடம் சொன்னது அப்படியே நினைவில் இருக்கிறது! “Computer Miss இப்பல்லாம் அடிக்கிறதில்ல! ஆனா அவங்க பக்கதில வந்தாலே Heart Beat வேகமா அடிக்குதும்மா!”

 *Please don’t beat! Our kids are smarter than us and stressed than us; They need not go through what we went through!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s