படமே கவிதை!

3இப்படத்துடன் முதலில் எழுதிய கவிதை படித்தவுடன்  புரியவில்லை என்று அனிதா சொன்னதால் எளிமையாய் எழுத முயன்றேன். இப்படமே ஒரு கவிதை என உணர்ந்தேன்.படம் பார்க்கும்போது வரும் உணர்வை உணரத்தான் முடிகிறது.

பிறகு எழுதியது உரைநடை, பொருளுரை மாதிரி ஆகிப்போச்சு! பொறுத்தருளவும் !
* மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரி வியந்து, புன்னகையுடன் எதிலோ ஒன்றியிருக்கிறார்கள்
*  இப்படி அவர்களைக் கவர்ந்தது எது எனத் தெரியவில்லை. ஆனால் கண்களின் ஆர்வம் அசர வைக்கிறது.
* இப்படிப் பொங்கும் ஆர்வத்துக்குத் தீனி போடுவதே நல்ல வளர்ப்பு!  நல்ல கல்வி!

* அந்தந்த நொடியில் இயல்பாக, முழுமையாக ஒன்ற வேண்டும். இதுதான் ஜென் கூறும் Here and Now
* இயல்பான Here and Now  குழந்தைகள் அளவுக்கு நமக்கு லேசானதில்லை
* அறிவும், மனமும் நம்மை இடைவிடாது அங்கே இங்கே இழுத்துச் செல்லும்.  இருக்கும் இடத்திலேயே இருப்போம்.  ஆனால் எப்பவோ காணாமல் போயிருப்போம்

*அந்தந்த நொடியில் முழுமையாக வாழ்பவர்களுக்கு உடல்-மனச் சோர்வே வராது.

*இந்த மூன்று குழந்தைகளும் அந்நொடியில் ஒன்றிய விதத்தில் அந்த Here and Now மகிழ்ச்சியை உணர்ந்தேன்

*”பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி அப்பனிமல ரெடுக்கமனமும் நண்ணேன்” என்ற தாயுமானவர் பாடலில் வருவது போல்…ஒவ்வொன்றிலும் இறைவனைக் காண்பதற்கு நாம் ஒவ்வொன்றையும் எவ்வளவு மதித்துப் போற்ற வேண்டும்… *குழந்தைகளுக்கு இது இயல்பாக வருகிறது. 

* நீச்சல், மிதிவண்டி என ‘Balance’ கற்பிக்கும் கலைகளைக் “கற்றுக் கொண்டோம்”.  எனத் தகுதி பெறுவது… எதுவும் செய்யமால் இருக்கும் போதுதான். மூன்று மாதக் குழந்தை தண்ணீரில் விட்டவுடன் நீந்துமாம். நமக்குக் குறைந்தது மூன்று வாரப் பயிற்சி. Balancing  is unlearning to be natural

  • குழந்தைகளுக்கு இயல்பாக பயம் இல்லை. ஆனால் பாதுகாப்பாக உணர விரும்புகிறார்கள் 
  • நாம் கற்றதைக் கற்றுத் தரும் “ஆர்வத்தில்”  முதலில் ‘பயம்’ கற்றுத் தருகிறோம். 

*அவர்கள் எதைப் பார்த்து வியந்து போற்றுகிறார்கள் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பார்த்துப் போற்றும் அழகில் கடவுளைக் காண்கிறேன்

*  இருந்தா இப்படி இருக்கணும்!
* அவர்களும் நாமும் … எப்போதும் எனத் தோன்றியது

பின் குறிப்பு

அழகான அனிதா, குழந்தைகள் பேசுற மாதிரியே ‘டமால்’ னு உண்மை பேசுவா. ரொம்பவே ரசிக்கிற மாதிரி இருக்கும். அநேகமா…”அக்கா! இதுக்கு அதே பரவாயில்ல” ன்னு  சொல்வா!

இயல்பான எழுத்து எப்போதும் புரியும். என்னிடம் “புரியவில்லை” என்று சொன்ன அனிதா, அகஸ்டின் (Comedy King) இருவருக்கும் நன்றி!  எழுதியதைப் படிக்க ஆள் இருப்பது மகிழ்ச்சி. படித்தது புரியவில்லை எனச் சொல்ல ஆள் இருப்பது பெரும்மகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s