அம்மாமகள்

Presentation1என் அம்மாவும் என் மகளும் அற்புத இணை

  • “நான் பாட்டி மாதிரியே” என உருகும் என் மகள்
  • இப்படிப் பிள்ளை கிடைக்கணுமே! என உருகும் என் அம்மா

 இவர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்து. . .  ஏதாவது படிப்பார்கள். ..எழுதுவார்கள்

 பேத்தி: பாட்டி கிட்டேயே படிச்சுக்கிறேன்! பாட்டிதான் நல்லா சொல்லிக்குடுப்பாங்க! நீங்க சொல்லி குடுத்தா புரியாது!

பாட்டி: ஒரு நிமிஷத்தில பிடிச்சுக்கிறா! அழகா மணி மணியா கையெழுத்து எழுதுறா. அவளே காலையில் எழுந்து படிக்கிறா! வீட்டுப்பாடம் முடிச்சிட்டுதான் விளையாடப் போவா!

  •  வீடு சுத்தம் செய்வார்கள்
  • எதையும் ஒதுங்க வைப்பார்கள்; எப்போதும் அடுக்குவார்கள்; ஒழுங்கமைப்பார்கள்
  • ஏதாவது வெட்டி ஒட்டுவார்கள்; ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்
  • திடீரென என்னிடம் தொலைபேசியில் பேசுவார்கள்
  •  சமையல் செய்வார்கள்; சேர்ந்து சாப்பிடுவார்கள்; சின்னக் குட்டிகளுக்கு ஊட்டுவார்கள்
  • சாம்பார்-ரசம்-சாதம், தோசை, French Fries பேத்தி கேட்ட அடுத்த நிமிடம் செய்து தருவார்கள் பாட்டி
  • எப்படி பாட்டி இவ்வளவு ‘Taste’ ஆ செய்றீங்க எனப் புகழ்வாள் பேத்தி!
  •  இயற்கை உலா போவார்கள்
  • நடப்பதோ, படிப்பதோ, மற்ற வேலைகளோ சலிப்பு, அலுப்பு இன்றி சிட்டுக்குருவி போல் இயங்குவார்கள்
  • அக்கம்பக்கத்தாருடன் அன்பு பாராட்டுவார்கள்
  • சின்னக் குழந்தைகளை சீராட்டுவார்கள்
  • பந்து விளையாடுவார்கள்
  • தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பார்கள்
  • தோனிக்குக் கை தட்டுவார்கள்
  •  எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப் படுத்துவார்கள்
  • எங்கும் நொடியில் கிளம்புவார்கள்
  • திடீரெனக் கிளம்பி திநகர் செல்வார்கள்; டக் எனத்  தேர்வு செய்து  வாங்கி உடனே திரும்புவார்கள்
  • எதிலும் தெளிவு மிளிரும்… வள வள பிடிக்காது!
  • இவர்களுக்கு நேர் மாறாய் இருக்கும் என்னை ‘வஞ்சகமில்லாமல் வாறுவார்கள்’

Daksh I’m tired என்றால்…7 வயது Daksh, என்ன வேலை செய்தீர்கள்? இதுக்கே  tired? பாட்டி தினமும் எவ்வளவு வேலை செய்றாங்க என்பாள்…அடுத்த நாள், “இப்படி சொல்லாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது? என்பாள்

 ஆண்டுகள் கூடக்கூட இந்த வெற்றி அணியின் சாதனைகளும் கூடும்! வாழ்க! வளர்க!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s