Vishruth சொன்ன சுப்பாண்டி கதைகள்!

டிப்பது, படம் பார்ப்பது, இணையத் தேடல், தன்னால் முடிந்த அளவுக்குத் தங்கைகளுடன் விளையாடுவது எனக், கொஞ்சம் சலிப்புடன் பொழுது போகிறது விஷ்ருத் க்கு… இது போதாதென்று இன்று காலை விஷ்ருத் -க்கு இப்படி ஒரு கனவு! பள்ளி முதல் நாள்!  Crafts Period! Crafs miss, Take out your books என்கிறார்கள்; அப்போது பார்த்து ஒரு Circular வருகிறது; அதைப் படித்துவிட்டு miss சொல்கிறார்கள்; இன்னும் மூன்று நாள் கழித்து உங்களுக்கு மீண்டும் விடுமுறை! நீங்கள் எல்லோரும் காத்மண்டு போகலாம்!

 

ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படிப்பான் விஷ்ருத். இதுவரை காத்மண்டுவில் 14 புத்தகங்கள் வாங்கியிருக்கிறான்… எங்களுடன் தான் படித்ததைப் பகிர்ந்து எங்களை மகிழ்விப்பான் விஷ்ருத். அவன் சொல்லும் சுப்பாண்டிக் கதைகளை நாங்கள் எல்லாம் ரொம்பவே ரசிப்போம்; நீங்களும்தானே!

 

கதை 1: சுப்பாண்டி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்கிறது. சுப்பாண்டி சகதியில் விழுகிறான். அப்போது மின்னல் வெட்டுகிறது. உடனே சுப்பாண்டி சொல்கிறான், “இதெல்லாம் too much ஆகத் தெரியலையா; முதல்ல என்னை நனைக்கிற; அப்புறம் என்னை அழுக்கா ஆக்குற! அப்புறம் என்னை Photo வேற எடுக்கிறியா”  

கதை 2: சுப்பாண்டியின் மாஸ்டருக்குக் காலையில் அமெரிக்காவில் இருந்து ஃபோன் வருகிறது. மாஸ்டர் பேசி முடித்தவுடன் ‘Good Night’ என்று சொல்கிறார். அதைக் கேட்ட சுப்பாண்டி மாஸ்டரிடம், “ஏன் மாஸ்டர் Good Night சொல்றீங்க; இப்போ காலைதானே?” எனக் கேட்பான். அதுக்கு மாஸ்டர் சொல்கிறார். நம் இந்தியாவில் இப்போது காலை! அமெரிக்காவில் இப்போது இரவு என்கிறார்”. அதற்கு சுப்பாண்டி சொல்கிறான், “அமெரிக்காவில் இருக்கிறவுங்க எல்லாம் ரொம்ப unlucky ஏன்னா சூரியன் மறையும் முன்பே அவர்கள் தூங்கப் போகணும்

கதை 3: சுப்பாண்டி ஒரு சின்னப் பையனிடம் கேட்கிறான், “உன் சாக்ஸில் எத்தனை ஓட்டை இருக்கு?” அந்தப் பையன் சொல்கிறான், “ஒரு ஓட்டை கூட இல்லை”; உடனே சுப்பாண்டி கேட்கிறான், “அப்படின்னா எப்படி காலை உள்ள விட்ட?”

கதை 4: சுப்பாண்டி தெருவில் மாரத்தான் வீரர்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். சுப்பாண்டி அருகிலுள்ளவரிடம் ஏன் எல்லோரும் ஓடுகிறார்கள்?” என்று கேட்கிறான் அதற்கு அவர், “முதலில் வருபவருக்குப் பரிசு கிடைக்கும்என்கிறார். உடனே சுப்பாண்டி, “ஒருவருக்குதானே பரிசு கிடைக்கும்! அப்புறம் ஏன் எல்லோரும் ஓடுகிறார்கள்?” என்கிறான்.

கதை 5: சுப்பாண்டி ஒரு கிரிமினலிடம் வேலைக்குச் சேர்கிறான். அந்த நபர் கிரிமினல் என்றோ ஆள்-கடத்தலில் ஈடுபடுபவன் என்றோ சுப்பாண்டிக்குத் தெரியாது. ஒரு நாள் அந்த ஆள் கடத்தி வந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை மீட்கப் பணத்துடன் வருவதாக இருந்தது. அப்படி அவர்கள் வரும்போது திடீரென போலீஸ் வந்துவிடக்கூடாது என்று அவன், “வெளியில் போலீஸ் யாராவது இருக்கிறார்களா என சுப்பாண்டியைப் பார்த்து வரச் சொன்னான்”. உடனே சுப்பாண்டி வெளியே போகிறான். போலீசுடன் திரும்புகிறான் சுப்பாண்டி . போலீஸ் கிரிமினலைக் கைது செய்கிறது. அப்போது சுப்பாண்டி சொல்கிறான், “ஐயா! நீங்க சுத்திமுத்தி போலீஸ் இருக்கான்னு பார்க்க சொன்னீங்க”. பக்கத்தில போலீஸ் யாரும் இல்லாததால் நானே போலீஸ் ஸ்டேஷன் போய் போலீஸைக் கூட்டி வந்தேன்.

நன்றி: விச்சாண்டி (சில நேரம் செல்லமாகக் கூப்பிடும் பெயர்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s