குழந்தைகள் கனவுகள் . . .

தக்ஷ் தினமும் தூங்கி முழித்தவுடன் அவளுக்கு வந்த கனவுகளைச் சொல்வாள். இன்று விடியற்காலை, Magic Carpet ல் பறந்தாக சொன்னாள். ரொம்ப ஜாலியாக இருந்ததாம். அம்மாவையும் கூட்டிக் கொண்டு பறந்தாயா தள்ளி விட்டுவிட்டாயா எனக் கேட்டதும், “நான் மட்டும் பறந்தேன்; அம்மா ஞாபகம் வரவில்லை என்றாள்”. ஒரு நாள் ஒரு கெட்ட கனவு வந்தது; சொன்னால் நீங்க ரொம்ப வருத்தப் படுவீங்க என்றாள். என்ன யாரையாவது கத்தியில் குத்தினாயா என்றால், ஆமாம்மா கரெக்டா சொல்லிட்டீங்க என்றாள். தூங்கப் போகும் முன் பார்க்க வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் அவள் பார்த்த படத்தில் வந்த காட்சி அது! விச்சுவுக்குப் பிடிக்கும் படங்கள் இவர்களுக்கு  சரிப்படாது! முதல் நாள் அவள் ரொம்ப பயந்த கனவு, ஒரு பெரிய பாம்புக் கனவு; அந்தப் பாம்பு என்னை சாப்பிட வந்ததும்மா! நீங்க என்னைக் காப்பாத்திட்டீங்க என்றாள். அது கனவுதானே தக்ஷ் இப்ப ஏன் பயப்படுற! அதான் ஒண்ணும் ஆகலைதானே எனக் கேட்டும் அவள் விடவில்லை; அன்று இரவு தூங்க மாட்டேன்; தூங்கினால் கனவில் பாம்பு வரும் என்று சொன்னாள். ஒரு நாள் எங்கள் அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் “ஓம் ஷாந்தி ஓம்” பாட்டுக்கு அசத்தல் ஆட்டம் போட்டுக் களைத்து வீடு திரும்பும்போதும் உற்சாகம் குறையவில்லை! “ஹை ஜாலி! எனக்கு இன்னைக்குக் கனவில் பாம்பு வராது! நல்ல கனவு வரும்” என்றாள். மறுநாள் விழித்தவுடன், “எனக்கு இன்னனக்குக் கனவே வரவில்லை ஜாலி என்றாள்” மொத்ததில் காத்மண்டு விடுமுறை நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்க் கழிகிறது என நினைக்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s