வேறென்ன வேறென்ன வேண்டும்? அம்மா-அப்பா, Vishruth, Dakshina, Rithikaa @ Kathmandu

என் மகள் வந்தாள்! எழில் கோடி தந்தாள்

ஒரு 45 நிமிடம் airport ல் கண்ணாடிக்குப் பின் காத்திருந்தேன்; காத்மண்டுவில் மட்டுமல்ல…மற்றபடியும் இந்த காத்திருப்புதான் முதல் முதல் அனுபவம்

முதலில் யாரைப் பார்ப்பேன் எனக் காத்திருந்த கண்களில் தெரிந்தது அப்பாதான்; அப்பா very lucky for all! முதன் முதலில்…எங்கள் எல்லோரையும் கல்லூரிக்கு, அலுவலகத்துக்கு கூட்டிச் செல்வதெல்லாம் அப்பாதான்… எங்கள் மூவரோடு சேர்த்து அருணாவுக்கும் அப்பாதான் lucky. அப்பாவின் Positive Energyதான் அதிர்ஷ்ட ரகசியம் என நினைக்கிறேன். வேலிக்காக அப்பா வைத்துக் கட்டிய முருங்கை மரக் கட்டைகூட துளிர் விட்டதால்…அப்பாவிடம் எதையும் கொண்டு வந்து ஜெபித்து செல்ல வேண்டும் என்று ஒரு பக்கத்துவீட்டு aunty சொன்னார்கள்

  • எல்லா சுமைகளுக்கும் மேல் ட்ராலியில் இரண்டு இளவரசிகளையும் உட்கார வைத்து அப்பா தள்ளிக் கொண்டு வந்தது கண்கொள்ளாக் காட்சி
  • சென்னை மாதிரிதான் இருக்கு. தக்ஷ் குட்டியின் முதல் கமெண்ட்

கட்டிடமாகவும், விடுதியாகவும் இருந்த ஒரு மிக அழகிய வசிப்பிடம் இப்போது மிக மிக அழகிய வீடு

Dakshina loved the little glasses I got for her (She is playing restaurant game using the dining table… Making Menu Card …. Sandwich, Burger, Pizza,  All flavours of ice creams, all fresh juices,  முதல் சாம்பார் சாதம், தயிர் சாதம், நெய் சாதம், நெய் தோசை வரை எல்லாம் கிடைக்கும்)

She stands in front of the mirror and dances; Rithikaa the judge has to give her the mark (Ritu irritates Dakshina saying 19 instead of 90 or even sometimes and 6 and 10) Dakshina then decides the mark she has to be given

இன்று காலை, எங்கள் வீட்டுக்குப் பின் வீட்டில் இருக்கும் Safal, அவன் அம்மாவுடன் சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் நான் அலுவலகம் கிளம்பியதும்

அம்மா-அப்பா வருகிறார்கள் பிறகு அக்கா-தங்கை குடும்பத்தினருடன் என்றதும் என் வீட்டுக்கு சொந்தக்காரரான மேவா கேசி என்ற அம்மா, “நீ என் மகள் மாதிரி எனக்கூறி மேலே உள்ள தன் தளத்தில் இரண்டு அறைகள், அலமாரிகள் எல்லாம் ஒதுக்கித் தந்தார்கள்; பணத்தைப் பற்றிப் பேசாதே! என் விருந்தினர்கள் என்றார்கள்; அவர்கள் தன் மகள் வீட்டில் வசிப்பதால், மகன் ஆஸ்திரேலியா அழைப்பதால் வாடகைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்…தரகரிடம், “யாரையும் அழைத்து வர வேண்டாம்! எனக்கு சொந்தக்காரர்கள் வருகிறறர்கள்” என்றார்களாம்! நேற்று தற்செயலாக சந்தித்த போது எனக்கும் இந்த வீடு பார்த்துத் தந்த Rental Agent சொன்னது! அடடா… எப்படி ஒரு நல்ல மனம்!

அம்மா-அப்பாவை நேபாளத்திற்கு வரவேற்க மாதுரி திதி (Nepal), முகம்மது அலி  (Pakistan) வீட்டிற்கு முதல் நாள் மாலையே மலர்க்கொத்து, இனிப்புடன் வந்தார்கள். தக்ஷ் குட்டிக்கு Paper Bird செய்து, Bloc ks அடுக்கித் தந்து.. தக்ஷ் குட்டியைக் கையில் பிடிக்க முடியவில்லை

என்ன சாப்பிடுவார்கள் என நான் கேட்டு முடிப்பதற்குள், தக்ஷ் Juice கொண்டு வந்தாள்; பிறகு ஒவ்வொன்றாக அவள் எடுத்துச் சென்று தந்து முடித்ததும் … “Your daughter has served us full dinner”

நன்றி சொல்லி இன்று அனுப்பிய மடலுக்கு வந்த பதில்!

Madhuri: My dear Bhuvana:Pleasure is mine and feel fortunate to be able to welcome your family to Kathmandu . I would have liked to do  in a grand way but time was not there , . But we shall meet again and do something fun with kids and with your parents. All of them are so loving and giving and I felt that I knew then from a long time! Warmly , Madhuri

MAli: Dear Bhuvana , Nothing to mention much.In our culture , friend’s parents are our parents.  I welcomed my parents.It was an immense pleasure to meet them and looking forward to meet them again & again. M Ali

வீட்டில்…

  • இப்போதுதான் திரைச்சீலைகள் திறக்கப்படுகின்றன
  • இன்று காலை முதன் முதலாக வெற்றிகரமாக தோசை சுட்டு…அது தக்ஷ் மேடம் க்கு பிடித்தும்விட்டது!
  • ஒவ்வொரு அறையின் நீள-அகலமும், ஒவ்வொரு அலமாரியின் அடுக்குகள் ஒவ்வொன்றும் அளக்கப்படுகின்றன!
  • வாரம் இரண்டு நாள் பெருக்கிக் கூட்டினால் போதும்; இப்போது தினம்…மூன்று நான்கு முறை!
  • காத்மண்டுவே களை கட்டியது போல இருக்கிறது
  • “அம்மா! நவம்பர் மாதமே நீங்கள் எல்லாம் வந்திருந்தால் நான் ஒழுங்காகக் குடியேறியிருப்பேன் போல!”
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s