பேர் சொல்ல ஒரு பேர் வேணும்

 • ‘பெயர், பெயர்’ ன்னு அடிச்சிக்கிறதோட இல்லாம இந்த தலைப்பில எழுதினதப் பார்த்திட்டு ஒரு நாலு பேராவாது தலையில அடிச்சுப்பாங்க
 • எழுத்து, இசை, ஒலி, ஓசை, அதிர்வு, அழகு எல்லாப் பெயரிலும்! ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு விதமாய்!
 • சிலருக்குப் பெயர் அழகு சேர்க்கும்; சிலர் பெயருக்கு அழகு சேர்ப்பார்கள்
 • அழகான தமிழ்ப் பெயர்களில் உயிரும் உணர்வும் கலந்திருப்பதாகத் தோன்றும். ஆனால் சரியான தொகுப்புகள் தமிழில் இல்லை இதுவரை அல்லது என் சிறு தேடலுக்கு எட்டியவரை
 • உச்சரிப்பில் சிக்கல் இல்லாமல் தமிழிலும், ஆங்கிலத்தில் யோசிக்காமல் எழுதத் தோதான பெயர்கள் வரம்!
 • வடமொழி எழுத்துக்கள் கலந்த சமஸ்கிருதப் பெயர்கள் அல்லாடும் அனைவர் நாவிலும். அதனால்தான் அழகு தமிழ்ப் பெயர்கள் உகந்தவை
 • எங்கள் வீட்டுக் குழந்தைகளின் பெயர்கள் தேர்வானவுடன், இதை நம் ஊரில் எப்படி உச்சரிப்பார்கள் என்று கற்பனை செய்து சிரித்துக் கொள்வோம்
 • தன் சகோதரி மகன் ஆர்யமான் க்குப் பேர் தேடும் முயற்சியில் மேனகா காந்தி எழுதிய இந்துப் பெயர்கள் புத்தகம் 7-8 வருடங்களுக்கு முன்பே முன்னூறு ரூபாய்; பெங்குவின் பதிப்பகம்; பெயரின் வரலாற்றுப் பின்னணி; பெயரின் பொருள் எல்லாம் தேடிப் பிடிக்கலாம்
 • சிலர் பேருக்குப் ‘பேர்’ வைப்பார்கள்; சிலர் ஆராய்ந்தறிந்து பேர் வைப்பார்கள்; எண் கணிதம், பிறந்த நட்சத்திரப்படி உகந்த எழுத்துக்கள், சில நேரம் சிலரைக் குளிர்விக்க பெயர்கள் வைக்கப்படும். பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பது சொத்து சார்ந்தது மட்டுமல்ல இது ஒரு பெரிய அரசியல்தான்.
 • இந்த சிக்கலில்லாமல் பெற்றவர்களே பெயர் வைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம்
 • குழந்தை பெற்றுக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குப் பெயர் வைக்கவும் தெரியும் என்பதுகூட தெரியாத அப்பாவிப் பெரியவர்கள் எங்கள் நாடு முழுவதும்!
 • இப்படியெல்லாம் அகராதியில் அடங்காத பிரச்சனைகளே வேண்டாம் என்று குழந்தை பிறக்கும் முன்பே ஆண் குழந்தை என்றால் இப்பெயர்; பெண் குழந்தை என்றால் இப்பெயர் எனத் தேர்வு செய்து, குழந்தை பிறந்த அன்றே பெயருடன் புகைப்படத்தை e-mail லில் அனுப்புகிறார்கள் அயல் நாட்டு நண்பர்கள்

ஊரில்

 

Bhu: உன் நட்சத்திரம் ஸ்வாதி யா? அதையே உனக்குப் பெயரா வச்சிருக்கலாம். நல்லா இருந்திருக்கும்

 

Prabha: அப்படிப் பார்த்தால் ‘அவிட்டம்’ நட்சத்திரத்திரத்தில பிறந்தா அவிட்டம் னா பெயர் வைக்க முடியும்?

 

Bhu: இப்ப ஏன் அவிட்டம் example சொல்றே? அது என் நட்சத்திரம்

 

Prabha: ஓஹோ! (சிரிப்பு)

 

(ஆனந்தி அமைதியாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டு சிரிப்பு)

 

சென்னையில்

 

அனீஷ் க்கு முதலில்  சொல்லப்பட்ட எழுத்துக்கள் ‘ல, லா, லி, லு, லே..)

 

பிரபா-பாபுவிடம்: அப்பன்னா லார்டு லபக் தாஸ் னு வைங்க

 

அவ்வளவு கிண்டலா? அந்தப் பெயரை பிரபா பையனுக்கு ரிசர்வ் பண்ணி வைக்கணும்

 

சரி பிரபா உன் பையனுக்கு என்ன பெயர் வைக்கப் போறே?

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s