DakshinDarling

 

Dakshina at Kalangal My friend:  நானும் Daksh குட்டியும் நல்ல நண்பர்கள்; Daksh குட்டியிடம் என்ன தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம்; என்ன ஆலோசனை வேண்டுமானாலும் கேட்கலாம்; யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிக நன்றாகத் தெரியும் Daksh  குட்டிக்கு. எனக்கு 35 வயதில் புரியாத, தெரியாத பல விஷயங்கள் இப்போதே Daksh  குட்டிக்கு அத்துப்படி.

 எப்போதும் அவள் உடையை, அவளுக்குத் தேவையான பொருள்களை அவள்தான் தேர்வு செய்வாள்; ஏதாவது ஒத்து வராத காரணம் இருந்தால் சொன்னால் புரிந்து கொள்வாள். எதையும் தேர்வு செய்ய நேரம் கடத்தாமல் சட்டென்று முடிவு செய்வாள். எல்லாம் நன்றாகப் புரியும்

 நல்ல நகைச்சுவை உணர்வு வேறு; நடித்துக் காட்டுவது; சொல்லிக் காட்டுவது, கிண்டல் எல்லாம் தானே வரும்; அவள் பதிலளிக்கும் பளீர் வேகம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்

 B: ஏதாவது படிக்க வேண்டுமா Daksh (அம்மா ஊரில் இல்லை-வெள்ளிக்கிழமை மாலை)

D: பாட்டி தான் நாளைக்கு வந்திருவாங்களே; நான் பாட்டி வந்ததும் படிச்சுக்கிறேன்; நான் class la வச்சே முடிவு பண்ணிட்டேன்; பாட்டிதான் நல்லா சொல்லிக் குடுப்பாங்க!

இப்படி பல நேரம் கப்பலேறும் மானம்! நான் சில நாட்கள் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்துநான் படும் அவஸ்தையைப் பார்த்தால் ‘Child-friendly Schools’ என்ற தலைப்பில் நான் செய்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைப் பழகத்தில் எனக்குத் தந்த PhD யைத் திரும்ப வாங்கிக் கொள்வார்கள்; Save the Children ல் நான் வகிக்கும் Education Thematic Manager for South Asia Region என்ற பதவிக்கு ஆள் தேடி விளம்பரம் செய்வார்கள்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s