வலையில் சிக்கிய நேபாள்…www.visitnepal.com

 women1நேபாள மக்கள் மரபுக் குழுக்கள்
நேபாள் மக்கள் தொகை 26 மில்லியனுக்கும் அதிகம்; இங்கு 40 வகையான இனம்/பழங்குடியினர் உள்ளனர்; இங்குள்ள மாறுபட்ட மக்கள் குழுக்கள், கற்காலத்தை நினைவு படுத்தும் மேற்கு மலைப் பகுதியிலிருந்து பரபரப்பான காத்மண்டு வரை புதுப்புது அனுபவங்களை இங்கு சுற்றுலாவுக்காக வருபவர்கள் பெறுகின்றனர்.

குடியிருப்புக் பகுதி சார்ந்த அடிப்படையில் மக்கள் பண்பாடு
வடக்கேயிருந்து வந்த திபெத்-பர்மிய அல்லது மங்கோலியர்கள்; தெற்கேயிருந்து வந்த இந்தோ-ஆரியர்கள் என இரண்டு முக்கிய குழுக்கள் நேபாளத்தில்! இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்த பழக்கவழக்கங்கள் இடம், தட்ப நிலை, கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் உருவானவை.

இனக்குழுக்கள் வசிக்கும் நிலப்பரப்பு/உயரத்தின் அடிப்படையில்

nepal_cultures

 ஷெர்பாஸ்-Sherpas
திபெத் மொழியில் ஷெர்ப என்றால் கிழக்கு. கிழக்கிலிருந்து வந்த மக்கள். 500 ஆண்டுகளுக்கு முன் திபெத்திலிருந்து வந்த இவர்களுக்குத் திபெத் மொழி, பண்பாடு, மதத்துடடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வணிகம் இவர்களின் முக்கிய தொழில். மலையேறுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். நின்று நீடிக்கும் வலிமைக்கும், திறமைக்கும் இன்று இவர்கள் உலகம் முழுவதும் பிரபலம். புத்த மதத்தைப் பெரும்பான்மையினர் பின்பற்றுகிறார்கள். மே 29, 1953 Edmund Hillary எவரெஸ்ட் கொண்டு சேர்த்து முதன்முதலில் எவரெஸ்டின் காலடி வைத்த Tenzing Norgay ஷெர்பா இனத்தவர்தான்

டோல்பா மக்கள்-Dolpa people
உலகிலேயே இவ்வளவு உயரத்தில் வசிக்கும் இனக் குழு இவர்கள் மட்டுமே.இவர்கள் மலையைத் தாண்டு காளி கண்டகி ஆற்றின் மேற்குப் பகுதியில் வசிக்கிறார்கள்; புத்த மத வழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.

லார்கே, சிலார் மக்கள் larke and siar people
லார்கே கோர்கா Gorkha மாவட்டத்தின் வடகோடி பகுதி; சியர் Dhading டாடிங் மாவட்டத்தின் வடகோடி பகுதி; இம்மக்கள் திபெத்திய மற்றும் குருங் மொழிகள் பேசுகிறார்கள்; இவர்கள் பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் குருங்க் இனத்தவருடன் ஒத்தவை

மனங்க் பாஸ் manang bas
மனாங்க் பகுதி மக்கள் மனங்க் பஸ் என அழைக்கப்படுகிறார்கள்.வணிகமே இவர்களின் முக்கிய தொழில். இவர்களுக்கு மொழி, எழுத்துவடிவம் உள்ளது. புனிதத்தலங்களான அன்னபூர்ணா, முக்தி நாத் இப்பகுதியில் உள்ளன. புத்தமதம் பான் – போ என்ற Bon-Po புத்தர் காலத்துக்கு முந்திய மதமும் வழக்கத்திலுள்ளன.

லோ பாஸ் மஸ்தாங் lo pas of mustang
லோ பகுதியில் குடியேறியவர்கள் லோபபஸ் என அழைக்கப்படுகிறாஅர்கள். இவர்கள் நேபாள்-திபெத் இடையே மேல்-கீழ் முஸ்தாங்க் பகுதிகளில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்த மதத்தவர். இவர்களுக்கென மொழி, (புத்தமாதம் தாண்டியும்) கொண்டாட்டங்கள் உண்டு.

ஒலங்சங்க் மக்கள் – olangchung people
நேபாளத்தின் முக்கிய வணிக மார்க்கமாமன ஒலங்சங்கைச் சேர்ந்தவர்கள். புத மதத்தவர். இவர்களுக்கெனத் சொந்தமான பழக்க வழக்கங்கள் உண்டு.

மிதமான தட்பவெப்பப்-பகுதிகள் இனக் குழுக்கள்:மத்திய மலைகள், பள்ளத்தாக்குகள்

பிராமணர்கள், சத்திரியர்கள் – brahmin and chhetris
நேபாளத்தில்  உயர்ந்த சாதியாகக் கருதப்படும் இரு பெரும் குழுக்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர். இந்தோ-ஆரியர்களைப் போன்ற கூர்மையான முக அமைப்பும் வெளிர் நிறமும் கொண்டவர்கள். பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்த்து வந்தவர்கள். சத்திரியர்கள் காசா அல்லது (Khasa, Khasi) காசியிலிருந்த்து வந்தவர்கள். இவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றினாலும் பல பிரிவுகள் உள்ளன தேசிய மொழியான நேபாளியைப் பேசுகிரார்கள். சமஸ்கிருதம் சார்த்ந எழுத்து வடிவத்தைப் பின்பற்றுகிறறர்கள்

கிராதி – kirati
ராய் மற்றும் லிம்பு மக்களை உள்ளடக்கியது கிராதி குழு. (Rai and Limbu people). ராய் அல்லது லிம்பு என்றால் தலைவர் என்று ப்ரொஉள் கிராதி வசாவழியினரே முதன் முதலில் காத்மண்டுவில் அரசு அமைத்தவர்கள். இவர்கள் கிழக்கு நேபாளத்தில் வசிக்கிறார்கள். வீரத்திற்குப் புகழ் பெற்றவர்கள். கூர்க்கா இனத்தவரைப் போலவே இராணுவத்தில் அதிக அளவில் இடம்பெறுகிறார்கள். லிம்பு இனத்தவ்ரின் புனித நூல்Mundhum.

நேவார்கள் – newars
காத்மண்டு பள்ளத்தாக்கில் அதிக அளவில் வசிக்கிரார்கள். இப்பகுதி முழுவதும் பெரிய வணிகங்களில் ஈடுபட்டுள்ளனர். மங்கோலிய முகச்சாய்லைக் கொண்டவர்கள். நேவாரி என்ற மொழி இவர்களூடையது இவர்கள் திபெத்-பர்மிய இனத்தவர். இவர்களின் முக்கிய மதங்கள், ஹிந்து, பெளத்தம்.  சிக்கலான சமூக அமைப்பு உப சாதிகள் உண்டு. வணிகம, விவசாயம் இவர்களின் முக்கிய தொழில்கள்.

தமங் tamangs

திபெத்திய மொழியில் தமங் என்றால் குதிரை விற்பவர்கள். திபெத்திலிருந்து வந்ததாக அறியப்படுகிறார்கள்.  காத்மண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் பெரும்பான்மையான தமங் இனத்தவர் வசிக்கிறார்கள். அவர்களின் சமூக வழக்கங்கள் புத்த மதம் சார்ந்தவரி. அவர்களுக்கெனத் தனி மொழி (தமங்) உண்டு.விவசாயம், கூலி வேலை செய்பவர்கள், சுமை தூக்குபவர்களா வேலை செய்கிறார்கள். (My Scottish Boss Philippa’s husband Jigme is Tamang)

மகர்-magars
மே
ற்கு நேபாள மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்; புத்தமதத்தவர்;மகர் குரா என்ற (Magar Kura) இவர்கள் மொழி திபெத்திய-பர்மிய மொழியுடன் தொடர்புடையது. விவசாயம், இராணுவ சேவை, நெசவு, வேட்டியாடுதல், மீன்பிடித்தல் போன்றவை இவர்களின் தொழில்கள்.

குருங்-Gurung
இவர்கள் வெகுளித்தனம், எளிமை, வீரம், ராணுவ சேவைக்காக அறியப்படுகிறார்கள். அன்னபூர்ணா பகுதியில் உயர் மலைச்சரிவுகளிலும் காளி கண்டகி பகுதிகளிலும் பாக்லுங்க் மாவட்டத்தில் (Baglung) வசிக்கிறார்கள். அரிசி, தானியங்கள், செம்மறியாடு வளர்ப்பில் ஏடுபடுகிறார்கள். மகர், தகாலி, கிராதிஸ் (கிழக்கு நேபாளம்) பாரம்பரிய உறவு கொண்டவர்கள்; இவர்கள் இசையை நேசிக்கிறார்கள்.இவர்களுக்கென்று தனி மொழி உண்டு.

 thakali_women1தக்கலி-thakalis
இவர்களின் பூர்வீகம் தோக்-கோலா என்ற உயரமான பள்ளத்தாக்கு. இது முக்திநாத் பகுதியில் மத்திய நேபாளத்தில் அமைந்துள்ளது. மங்கோலிய முக அமைப்பைக் கொண்டவர்கள்; வெளிர் நிறம் சிறிய கண்கள். விருந்தோம்பல், வணிததிறன், தூய்மைக்காக இவர்கள் மிகப் பிரபலம்.

தொழில் சார்ந்த ழுவினர் – occupational castes
கொல்லர்கள்,
தையல்கார்கள், சலவை செய்பவர்கள்; காலணி தயாரிப்பவர்கள், பாடகர்கள், குயவர்கள் Kamis (smiths), Damais (tailors), Dhibis (washerman) Sarkis (cobblers), Gaines (professional singers) and Khumbharas (porters). பெரும்பாலானவர்கள் இந்துக்கள். வெவ்வேறு உள்ளூர் திருவிழாக்கள், பழக்க வழக்கங்கள் நடைமுறையிலுள்ளன.

வெப்பபப் பகுதி
நேபாள எல்லைப் பகுதி தராய் பகுதிக் குழுக்கள்

பிராமணர்கள், ராஜபுத்திரர்கள்brahman and rajputs
மத்திய மலைப்பகுதையைச் சார்ந்த பிராமணர்கள், சத்திரியர்களைப் போன்றவர்கள்.ஆனால் இப்பிரிவினரிடையே வட இந்தியர்களின் தாக்கம் அதிகம்;

தாருக்கள்-tharus
தராய் பகுதியின் தொன்மையான இனக்குழு இது.அடர்ந்த காடுகளில் வசிப்பவர்கள்; டருத்த நிறமும் திடமான உடலமைப்பும் கொண்டவர்கள். இந்து மதத்தைப் பின்பற்றுகிறர்கள்; ஆரியர்களின் தாக்கம் அதிகம்; விவசாயம் முக்கிய தொழில்; சமஸ்கிருதம் சார்ந்த மொழியைப் பேசுகிறார்கள்

ராஜ்பன்சி-rajbansis
தராய் பகுதியின்கிழக்குக் கோடி (Jhapa, Morang) பகுதியைச் சேர்ந்தவர்கள்; ஹிந்துக்கள் முஸ்லிம் இனத்தவர்கள்; தமக்கென்று மாறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்; இவர்களின் முக்கியத் தொழில் விவசாயம்

சதார்-satars
இவர்கள் பிகாரின் சந்தால் இனத்தை ஒத்தவர்கள். இவர்களை தாருக்களைப் போன்றவர்கள்; இவர்களின் சமூக வாழ்க்கை ஒழுங்கமையப் பெற்றது; இவர்கள் ஹிந்துக்கள். விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்;

இஸ்லாமியர்கள்: வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்; உருது பேசுபவர்கள்

நேபாள பாரம்பரியக் குழுக்களைப் பற்றிய அடிப்படைத் தொகுப்பாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் யார் ‘முதல் குடி’ எனத் தேடிப்பார்ப்பது சுலபம் அல்ல; இடம்பெயர்தல் வரலாற்றைத் தொடர்ந்து நேபாளம் உருகிக் கரையும் பானையாகவே ‘Melting Pot’ உள்ளது; (குறிப்பாக நகரங்களில்)

 ஆதாரம்: http://www.visitnepal.com/nepal_information/people.php

தேடல்,தொகுப்பு, தமிழ்: ‘பு’

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s