குருவிப் பார்வை – நேபாளம்

கழுகாவது மேலே இருந்து round அடித்துக் கொண்டே look விடும் நான் பக்கத்திலிருந்து சின்னக் கண்ணால் பெரிய உலகத்தைத் கொஞ்சம் கொஞ்சம் பார்த்து உடனே உடனே பறப்பதால் இது நிறைவானது இல்லை எந்த வகையிலும்

slide1

Nepal நாடு, மக்கள், தோற்றம், உணவு

 • 12 ஆண்டுகள் ஆயுதம் தாங்கிய போர் அண்மையில் முடிந்து தராய் பகுதியைச் சார்ந்த (இந்திய வம்சாவழியினர்) பிரச்சண்ட என்ற மாவோயிஸ்ட் பிராமணர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்
 • சீனர்களுக்குப் பொட்டு வைத்தது போல சிலர்; வட இந்தியர் போலவே அச்சு அசலாக சிலர்; தராய் பகுதி என்ற இந்திய எல்லைப் பகுதியில் உள்ளோர், நேபாள மொழி பேசும் பிராமணர்கள்  வட இந்தியர்களைப் போல வே இருக்கிறார்கள்
 • இங்கும் மிக முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பிராமணர்களே
 • இந்தியாவைப் போலவே இங்கும் மரபு சார்ந்த பல குழுக்கள் உள்ளன; பிராமணர், நேவார், ஷெர்ப்பா, கூர்க்கா (கோரக்நாதரை வழிபடுவோர்) தமங், குருங் etc.

Temple Scenes

 

 • British இராணுவத்திற்காகப் போரிட்டிருக்கிறார்கள்: இவர்களின் விசுவாச உணர்வு உலகப் புகழ் பெற்றது. இவர்களின் Loyalty க்கு பரிசாக British நாட்டவர் இவர்களுக்குத் தாம் வென்ற பகுதிகளைப் பரிசாகத் தந்தனராம்; உண்மை வீரமும், விசுவாசமும் ஒரு அபூர்வக் கலவைதானே!
 • இதுவரை எந்த நாட்டிற்கும் அடிமை நாடாக இருந்ததில்லை
 • அழகான பித்தளை, தாமிரப் பொருள்களைப் பார்க்கலாம்; பாரம்பரிய உணவகங்களில் தட்டு, கோப்பை, கிண்ணம், தம்ளர் என வகை வகையான அளவுகளில், வடிவங்களில் பித்தளைப் பாத்திரங்களில் பரிமாறுகிறார்கள்; நமக்கு அப்படியே கொஞ்சம் நம்ம திருநெல்வேலி நினைவுக்கு வரும்
 • நம்மைப் போலவே அரிசிச் சோறு, பருப்பு, காய்கறிகள், கீரைகள், என்றிருந்தாலும் பருப்பு-சூப், சப்பாத்தி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கேரட், பூண்டுத் தாள், பட்டாணியையும் பார்க்கலாம் எங்கும்; பழங்களுக்குப் பஞ்சமில்லை: கமலா ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி களை கட்டியிருந்து போன மாதம் வரை; அவலை நன்கு பயன்படுத்துகிறார்கள்; அவசர உணவாக, சிற்றுணவாகவெல்லம் சேர்த்த பாப்கார்ன் இங்கு கிடைக்கிறது. இயற்கை உரங்களால் விளைந்த பொருள்களுக்காக Organic Shops உள்ளன; இமயமலைப் பகுதியில் எத்தனை உயரத்தில் வளர்ந்தது; எந்த அமைப்பு/குழுவினர் உருவாக்கிய விளைச்சல் என்று முழு விவரமும் பதிவு செய்து விற்கிறார்கள்;

பண்புகள், பணி நேர்த்தி

 • ஏற்கனவே சொன்னது போல கையிலிருப்பதை எல்லாம் வீசிவிட்டு இரு கரம் கூப்பி அழகாக நமஸ்தே என்று வணக்கம் சொல்கிறார்கள்
 • என் பார்வையில், இங்கு மக்கள் இயல்பாகவே மிகவும் பணிவானவர்கள், மென்மையானவர்கள். இருபாலரும்
 • புன்னகை குறைவு – மென்மையான அன்பு, மதிப்பு அதிகம்
 • வேலையில் நேர்த்தி அதிகம்; எதிர்ப்பார்ப்பதைவிட கூடுதலாக சொல்லாமலேயே செய்து தருவார்கள்

மொழி

 • நேபாளி கற்றுக் கொள்ள நான் முயற்சி கூட செய்யவில்லை. IC Indian Currency (Except Rs. 500 or Rs. 1000) செல்லுபடியாவதுபோல ஹிந்தியும் செல்லுபடியாவது ஒரு காரணம். மற்ற காரணம் நேபாளி பேசும் வேகம், மென்மையான மிதப்பது, பறப்பது போன்ற மொழி..
 • கேட்கப்பிடித்தவை:  ஹ ஜுர்  ஆங் சொல்லுங்க! Yes! (ஹிந்தியில் ஜி ஹாங்) போல அடிக்கடி கேட்கலாம்;  டீக்சா, ஊன்ஸா, லா லா லா =சரி, OK அடிக்கடி கேட்கலாம்
 • இங்கு மத-சாதி-நிற-இன வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை எதுவும் என்னை பாதிக்கவில்லை (நன்றி இறைவா!)
 • தென்னிந்தியர்களை மிகவும் பிடிக்கும் (இந்தியா, வட இந்தியர்களைக் கொஞ்சம் வெறுக்கிறார்கள்)
 • விடியற்காலையில் எழுந்து கடவுள்களை சங்கு ஊதி எழுப்பி அதிகாலை பூஜை செய்கிறார்கள்.  கொஞ்ச நாள் சங்கு ஊதும் ஓசை=திக் உணர்வு நமக்கு மறைந்துவிடும்
 • கோலம் போல வட்டமாக செம்மண்+சாணம் சேர்த்துக் கரைத்து வட்டத்தில் அப்பிவிட்டு அதன் மீது பூ இதழ்கள், அரிசி தூவி வைக்கிறார்கள்.
 • கோவில்கள் நிறைய உள்ளன. அழகிய கட்டிடக் கலை, மர வேலைப்பாடு; வீதியெங்கும் ஒரு அழகான அற்புதம்; ஆனால் எல்லாம் தூசி படிந்து, அழுக்காகவே இருக்கும். குளிர் காரணமா? இருக்கலாம்; கோவிலுக்குள்ளும் ஏதாவது ஒரு காலணியில் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பெட்டியோடு ஊதுபத்தி கொளுத்த குளிர் காரணமில்லல. அண்மையில்தான் பராமரிப்புத் தரம் குறைந்ததாகப் படுகிறது. இவ்வளவு அழகான கலைக்கு சொந்தக்காரர்களுக்குத் தூய்மை உணர்ச்சியும் நிறைவவே இருந்திருக்கும்; வறுமை, தண்ணீர், Conflict, விரக்தி, ந(ர)கரமயமாதல்,  இன்ன பிற காரணங்களால்…. அடிக்கடி தோன்றுவது “கடவுள் காத்மண்டுவைக் கழுவிவிட வேண்டும்”.  Nepal is a walking museum மாதுரி திதி சொன்னது

Architecture-Artifacts

 • கோவில் குளத்திற்குள் காசை விட்டெறிகிறார்கள். இடையில் நிற்கும் யார் மேல் பட்டாலும் கவலை இல்லை. என் உடன் பணிபுரிபவரின் நெற்றிப் பொட்டில் பட்டு அவருக்குத் தலை சுற்றியதோடு சிவந்து கன்றிப்போனது
 • நேபாளி சியா Chiya என்றால் பால்-சர்க்கரை சேர்த்த தேநீர்
 • புத்தமதம் சார்ந்த பல சின்னங்களையும் பார்க்கலாம் இங்கே; ஹிந்துக் கோவிலும், புத்தமதக் கோவிலும் அருகருகே
 • புத்தர் பிறந்த லும்பினி (Lumbini) இங்கேதான் உள்ளது. வேறு நாட்டு புத்த மதத்தவர் இங்கு வந்து புத்தருக்குப் பொட்டு வைத்து பூ வைத்து விடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்களாம்! ஆனால் உலகின் பல நாடுகளைப் பார்த்த, Standford University யில் PhD பட்டம் பெற்ற நேபாளி மாதுரி திதி சொல்வது, “எங்கள் நாட்டில் பிறந்தவர் சித்தார்த் கெளதமா நாங்கள் என்ன வேணுன்னாலும் செய்வோம்”
 • திதி (Didi)என்றால் அக்கா; தாய் (Dai) என்றால் அண்ணா; பஹனி (Bahni) தங்கை என்றால் Bhai (பாய்) என்றால் தம்பி வேலை பார்க்கும் இடத்திலும் இப்படி முறை சொல்லி மதிப்புடன் அழைக்கிறார்கள்
 • சிவப்புதான் இவங்களுக்குப் பிடிச்ச கலரு: ஸ்வெட்டர், ஷால், சேலைகள், நெற்றிப்பொட்டு, குங்குமம் எல்லாம் சிவப்பு. Red leafலால் பத்தர் என்ற சிவப்பு நிற இலை போன்ற பூ பூக்கும் மரமும் நேபாளத்துக்குப் பொருத்தமாக அங்கங்கு
 • நாம் நெற்றியில் லேசாகப் பூசிக்கொள்ளும், திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம் வகையறாக்களை இவர்கள் தாமே பூசிக் கொள்ளாமல் மதிப்புக்குரிய வீட்டுப் பெரியவர்கள் அல்லது கோவில்களில் பிராமணர் மூலம் பூசிக் கொள்கிறார்கள். இதைத் டிக்கா (Tikka) என்கிறார்கள்
 • ஒரு டப்பா குங்குமத்தைக் கவுத்தியது போல இருக்கிறதே எப்படி என யோசித்தால்இதில் தயிர், அரிசி எல்லாம் சேர்ப்பார்களாம்
 • கடைகளில் மிகவும் பணிவாக இருக்கிறார்கள். ரொம்பவே கடைக்கு வருபவரை நம்புகிறார்கள்; பணமே வாங்காமல் போட்டுப் பார்த்துவிட்டுக் கொண்டு வந்து தாருங்கள் என்று ஒரு கடையில் ஒரு துணி தந்தார் ஒரு கடைக்காரர். நம்ம முக ராசியா? நேபாளின் நம்பிக்கையா தெரியவில்லை

பிடிக்காதவை

 • சுத்தக் குறைபாடு மொத்ததில், அது தவிர, துப்புவதும் சரமாரியாக பக்கத்தில் நிற்பவர்கள், எதிரில் நிற்பவர்கள் பற்றியெல்லாம் கவலை இல்லை
 • Load-shedding  என்ற பெயரில் ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது

இதோடு அரை-குறைப் பார்வையாக விடாமல்…. கொஞ்சம் இணையத் தகவல்களைத் தொகுத்துத் தமிழில் தருகிறேன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s