Hello!

Global Greetings?!

Hello!

Hi!

Hi there!

Hey!

 

அடுத்து என்னவாகும் தெரியலை!

Afghanistan: இருப்பதிலேயே நீளமான வணக்கம் இவர்களுடையதுதான்; “நல்லா இருக்கீங்களா? உடல் நலமாக இருக்கிறதா? குடும்பத்தினர் அனைவரும் நலமா?”. தினமும் அலுவலகம் வந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் இருக்கைக்கும் சென்று கைகுலுக்கி இவ்வளவும் விசாரித்துவிட்டுதான் வந்து இருக்கையில் அமர்கிறார்கள்; பெண்கள்-பெண்கள் மூன்று முறை அணைத்து கன்னத்தோடு-கன்னம் வைத்து முத்தமிடுகிறார்கள். ஆண்கள்-ஆண்கள் மூன்று முறை அணைத்து கன்னத்தோடு-கன்னம் வைத்து  முத்தமிடுகிறார்கள். இஸ்லாமிய வணக்கம், சலாம் என்ற இஸ்லாமிய Hello வும் வழக்கத்தில் உண்டு. ஆண்கள் தனது நெஞ்சில் இடப்பக்கம் (இதயத்தில்) வலது வைத்தும் வணங்குவது போல செய்கிறார்கள்.

Bangladesh: இஸ்லாமிய வணக்கங்கள் தவிர, பங்களா(Bengali) மொழியில் நமோஷ்கார் (நம்ம ஹிந்தி நமஸ்கார்தான்) என்று இரு கரம் கூப்பி சொல்வார்கள். கைகுலுக்கிக் கொள்வதும், பெண்கள்-பெண்கள் அணைத்து வாழ்த்துவதும் வழக்கத்தில் உள்ளது.

India:Tamil Nadu: இரு கரம் கூப்பி வணங்கி வணக்கம் சொல்லுவோர் இன்னமும் இருக்கிறார்கள்; புன்னகையே வாழ்த்தாகவும் வணக்கமாவதும் உண்டு; காலத்துக்கு ஏற்ற மாதிரி Hi, Hi-Fi எல்லாம் உண்டு (In modern settings); கைகுலுக்கிக் கொள்வதும் வழக்கமானாலும், ஆண்கள்-பெண்கள் கொஞ்சம் யோசிப்போம்; சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்-பெண்கள் அணைத்து வாழ்த்திக் கொள்கிறார்கள்

Nepal: இரு கரம் கூப்பி வணங்குவது இந்தியாவைவிட நேபாளத்தில் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. வணங்கும்போது ‘நமஸ்தே’ என சொல்வார்கள். கையில் வாளி, சிகரெட், கட்டை, மட்டை எது இருந்தாலும் கீழே போட்டுவிட்டு அழகாக வணக்கம் சொல்வார்கள்; இருபாலரும் கைகுலுக்கிக் கொள்வது சர்வதேச வட்டத்துக்குள்தான்; பெண்கள்-பெண்கள் அன்புடன் அணைப்பது நடைமுறையில் உள்ளது; சர்வதேச வட்டத்துக்குள் வந்தவர்கள் பெண்கள்-ஆண்கள் Hug also பரவலாகத் தெரிகிறது

Srilanka: நம்மைப் போலவே இரு கரம் கூப்பி வணங்குகிறார்கள் தமிழர்-சிங்களர். சிங்களர் ‘ஆய் போவன்’ எனக் கூறி நீண்ட ஆயுளுக்கு வாழ்த்துகிறார்கள்; கைகுலுக்கல் இருபாலருக்கும் பொதுவாகத் தெரிகிறது (Srilankans are more British than the British – Is this true); சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அணைத்தும் வாழ்த்திக் கொள்கிறார்கள்

1.        Handshakes and Hugs in general:  South Asian Woman looking conventional என்றால் பெரும்பாலும் எந்த நாட்டு ஆண்களும் தயங்குவார்கள். Even if hug is their culture. 

2.     சர்வ தேச multi-cultural environment பெண்கள் என்றால்  Handshake / Hug வழக்கமானவை: ஆனால் இந்த அணைப்பில்  பலவகை: Shoulder to shoulder once; Full hug once; Shoulder to shoulder left and right; Shoulder to shoulder left-right-left with kisses away from cheeks in Afghani style.

3.      A Dutch woman asked a British man (Now a muslim), “You want to hug me before I leave?” He replied, “It’s not in my British or muslim culture to hug; They then talked about another woman saying, She throws herself i.e. she goes around hugging everyone

Moral of the story: Whether woman-woman, man-man or woman-man ரொம்ப ஒதுங்கிப் போய் மற்றவர்களின் வழக்கமான வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போலவும் ஆகிவிடக்கூடாது. ரொம்ப ஒத்துழைத்து வெளியேற முடியாமலும் போகக் கூடாது (சில நேரம் கை குடுத்து திரும்பி வர நேரமானாலே ‘திக்’ னு இருக்கும்)…Be alert and strike a balance…wherever possible escape the scene if uncomfortable!  பெரும்பாலான நேரங்களில் intention of the touch and even intention of look புரியும். Intention சரி இல்லாதவர்களுக்கும் யாரிடம் எடுபடும்னு தெரியும். Bad intention not only a man-woman thing. True for woman-woman, man-man touch also. Always respect yourself and don’t get into anything you are not comfortable with!

 

Advertisements

One thought on “Hello!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s