ஒரு ஊர்ல ஒரு ரித்து …

 Dakshu-Ritu

ரித்துக் குட்டிக்குப் பிடித்த கதைகள்

‘பிடித்த’ அப்படின்னா சும்மா இல்லை. ஒவ்வொரு தடவையும் 3 கதையையும் வரிசையா குறைந்தது 3 முறை சொல்லணும்எனக்கோ, மேடம்கோ தூக்கம் தள்ளுற வரை

 

இந்த கதைப் பிணைப்பு உருவானது மேடம் முதல் முறையா அவங்க அம்மாவை விட்டுவிட்டு என் கூட தூங்கிய போதுதான். அம்மாவைத் தேடிடக்கூடாதுன்னு அணைப்பு, கொஞ்சலுடன், Total Entertainment க்காக Extra-attractive கதைகள் சொல்ல வேண்டியதாச்சு. எங்கள் கதைப் பிணைப்பைப் பார்த்து தக்ஷ் கொஞ்சம் Tension ஆகி, “ஏய்! அது எங்க அம்மா-டி” என்று கோபக் குரலில் சொன்னதையெல்லாம் நாங்க கண்டுக்கல.

 

சித்தி ன்னு கூப்பிடுறதெல்லாம் Ritu Baby Style கிடையாது. புனேஷ் அல்லது புனா தான். “புனேஷ், சிக்கு புக்கு கதை சொல்லு” ரித்து கூப்பிடுறதைக் கேட்டுக் கேட்டு, ஒழுங்கா பெரியம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த அமித் குட்டியும் ஒரு நாள் புனேஷ் சிக்கு புக்கு கதை சொல்லு அப்படின்னார்.

 

இவர்கள் கதை கேட்கும் ஆர்வத்தையும் அவர்களுக்குப் பிடித்த கதையைக் கேட்கும்போது கண்ணில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்த்தா சொல்லிக்கிட்டே இருக்கலாம்னு தோணும். ரித்துவுக்கு Turning Points, Key words எல்லாம் அத்துப்படி ஆகிடும். கதை சொல்லிக்கிட்டிருக்கும்போதே Jump பண்ணுவாங்க. நாம மறந்து போய் கொஞ்சம் வள வளன்னு சொன்னா நம்மைக் Correct பண்ணுவாங்க. படித்தது, கேட்டது தவிர கதைகள் அந்தந்த நேரம் தப்பிக்கறதுக்காக தடாலடியா உதிக்கிற கதைகளும் உண்டு

 

1.சிக்கு புக்கு

Chicku-Pukku:(இது உதித்த கதைதான்! ஆனால் இதுதான் Super-duper hit)

 

ஒரு ஊர்ல ‘சிக்கு’ ன்னு ஒரு கோழி இருந்துச்சாம்

ஒரு நாள் அந்தக் கோழி ‘புக்கு’ னு ஒரு புழுவை டபக்குனு கொத்திச்சாம்

புக்கு எப்படியாவது Escape ஆகணும்னு

சிக்கு-புக்கு சிக்கு-புக்கு ரயிலே ன்னு பாட்டு பாடிச்சாம்

யார்டா நம்ம பேரை சொல்றான்னு சிக்கு லேசா பயந்து வாயைத் திறந்துச்சாம்

உடனே புக்கு டபக்குனு சிக்கு வாயில இருந்து குதிச்சு Escape ஆயிடுச்சாம்

அப்படியே நெளிஞ்சு போய்க்கிட்டே இன்னொரு வாட்டி சிக்கு-புக்கு சிக்கு-புக்கு ரயிலே ன்னு பாடிச்சாம்

சிக்கு உடனே புக்குவைப் பார்த்துட்டு நீதான் என்னை ஏமாத்தினியான்னு சொல்லிட்டே துரத்திச்சாம்

புக்கு இன்னொரு வாட்டி சிக்கு-புக்கு சிக்கு-புக்கு ரயிலே ன்னு பாடி  Bye சொல்லி ஒரு Dance ஆடிக் காட்டிட்டு வேகமா ஓடி Escape ஆயிடுச்சாம்

 

(இதிலே ரித்து மேடம்க்கு பிடிச்ச Highlight சிக்கு வாயை லேசா திறந்துச்சு என்பது! அழகா விரலை வைத்து கோழி அலகு திறப்பது போல செய்து காட்டுவாங்க! அப்புறம் அவங்க உடனே பிடித்துக் கொண்ட புது வார்த்தை “Escape”)

 

இது சொல்லி முடிக்கும் முன் அடுத்த கதைக்கு Title போட்டுடுவாங்க மேடம் “சரி சரி இப்ப ராஜா மோகன் கதை சொல்லு!”

 

2. ராஜா-மோகன்

(எங்கோ எப்போதோ படித்தது கொஞ்சம் சுருக்கி உல்டா பண்ணியாச்சு)

 

ராஜா, மோகன் ஒரு School ல படிச்சாங்களாம்

அவங்க School ல Biscuit செய்ற போட்டி வச்சாங்களாம்

ராஜா கஷ்டப்பட்டு TV பார்த்து, Books படிச்சு, Internet ல எல்லாம் தேடி Sweet Biscuit Ready செய்வானாம்

ஆனா மோகன் ஒண்ணுமே செய்யாம ஊர் சுத்திட்டு இருப்பானான்

மோகன் Friends எல்லாம் “டேய்! ராஜாக்கு தான் Prize கிடைக்கப்போகுது அப்படின்னு சொல்வாங்களாம்

இதைக் கேட்டவுடன் மோகனுக்கு எப்படியாவது ராஜாவுக்கு Prize கிடைக்காம பண்ணனும் தோணிச்சாம்

ஓடிப்போய் ராஜா செய்த Sweet Biscuit மேல Salt தூவிட்டானாம்

அப்புறமா அவசர அவசரமா ஒரு Biscuit செய்து அதை அழகா Decorate செய்து வச்சானாம்

மறு நாள் Biscuit Taste பண்ணி பார்த்து Prize கொடுக்க வந்தவுங்க மோகன் செஞ்ச Biscuit அழகாக இருக்கேன்னு சொல்லிக்கிட்டே உள்ளே வந்தாங்களாம்.

முதலில் ராஜா செய்த Biscuit எடுத்து taste பார்த்து, “Salt and Sweet! புதுமையா இருக்கேன்னு சொன்னாங்களாம்.

இப்ப இந்த அழகான Biscuit taste பார்க்கலாம்னு மோகன் செஞ்ச Biscuit எடுக்கப்பார்த்த அந்த Biscuit பசக் பசக் னு கையில் ஒட்டிச்சாம்

மோகன் அவசர அவசரமா செஞ்சதால Biscuit முழுசா வேகலையாம்

பார்க்கதான் நல்லா இருக்கு! ஆனால் ராஜா செய்த Biscuit தான் பார்க்கவும் நல்லா இருக்கு. Salt and Sweet சுவையும் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு் ராஜா கிட்ட எப்படி உனக்கு இப்படி Salt and Sweet செய்யலாம்னு யோசனை வந்துதுன்னு கேட்டாங்களாம்

ராஜாவுக்கு பரிசு கிடைச்சது சந்தோஷம்தான். ஆனாலும் ஒண்ணுமே புரியலயாம். என்னடா இது? நாம Sweet taste மட்டும்தானே போட்டோம் அப்படின்னு யோசிச்சானாம்

மோகன் தான் செய்த தவறால தனக்கு பரிசு போனதோட ராஜாவுக்குப் பாராட்டும் கிடைச்சத நினைச்சு தலையை குனிந்தானாம்

 

(இதுல ரித்து பேபிக்குப் பிடித்த turning point Salt.கதை சொல்லிட்டே இருக்கும்போது Salt Salt ன்னு சொல்லுவாங்க! அப்புறம் அவங்க ஒரு நாள் கதை சொல்லும்போது, “மோகன் செஞ்ச Biscuit Bubble Gum மாதிரி ஒட்டிச்சாம்னு அழகா உதாரணம் சொன்னாங்க! கதை தொடக்கத்தில ஏதாவது விட்டுட்டா மேடம் விட மாட்டாங்க ராஜா TV பார்த்து, Books படிச்சு, Computer ல தேடி அப்படின்னு வரிசையா சரி பண்ணுவாங்க)

 

அடுத்த Title: சரி இப்போ Monkey Cat கதை சொல்லு

 

 

3. Monkey, Cat and Cheese

இது எல்லாருக்கும் தெரிஞ்ச பூனை, குரங்கு பால்கட்டி கதைதான்

 

ஒரு ஊர்ல, இரண்டு பூனை இருந்ததாம். அவங்களுக்கு ஒரு Cheese கிடைச்சுதாம். எனக்கு, உனக்கு சண்டை போட்டாங்களாம்.

சண்டை தீரலையாம்

குரங்குகிட்ட போய் சொன்னாங்களாம்

குரங்கு, “சரி! நான் சமமாப் பிரிச்சுத் தரேன் னு சொல்லிட்டு Cheese ஐ இரண்டாப் பிரிச்சுதானம்.ஒரு துண்டு பெரிசாகவும் ஒரு துண்டு சின்னதாகவும் ஆகிடுச்சாம்

உடனே இரண்டையும் சமமா ஆக்கித் தரேன்னு பெரிய துண்டை ஒரு கடி கடிச்சு சாப்பிட்டுதாம்

இப்போ அந்த முதலில் சின்னதா இருந்த துண்டை விட கடிச்ச துண்டு சின்னதா தெரிஞ்சுதாம்.

உடனே சமமாக்குறேன்னு இன்னொரு துண்டையும் ஒரு கடி கடிச்சுதாம். இப்படியே இரண்டையும் சமமாக்குறேன்னு சொல்லிக்கிட்டே மொத்த Cheese ஐயும் காலி பண்ணியிருச்சாம்

இப்பதான் இரண்டு பூனையும் புரிஞ்சுதாம். “நாமே ஒழுங்கா சண்டை போடாம இரண்டு பங்கா பிரிச்சிருக்கலாம்”. சண்டை போட்டுக்கிட்டு குரங்குகிட்ட வந்ததால இரண்டு பேருக்கும் ஒரு சின்ன துண்டு Cheese கூட கிடைக்கலை

 

(இந்த கதை ரொம்ப Build-up இல்லாம சீக்கிரம் முடியும். மேடம் பொறுமையா முழுசா கேட்பாங்க…. ஆனா இது முடிஞ்சவுடன் அடுத்த Round சிக்கு-புக்கு Request தொடங்கிடும்)

 

 

Advertisements

One thought on “ஒரு ஊர்ல ஒரு ரித்து …

  1. அன்புள்ள அக்காவுக்கு,

    உங்களின் வலைப் பதிவுகள் அற்புதமாக உள்ளன. நான் அவற்றைப் படித்து, ரசித்து வருகிறேன். பதில் போடத்தான் அவகாசம் இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்துள்ள குழந்தைகளுக்கான கதைகளை ஒரு நல்ல சிறுவர் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகக் கருதுகிறேன். அந்தக் கதைகளைப் படித்தபோது எனக்கு எழுந்த சிந்தனைகளை எனது வலைப் பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

    http://senthilkumarjourno.wordpress.com/

    அன்புடன்
    செந்தில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s