Temple architecture for Schools – Why not?

இந்த வாரம் யுனிசெஃப் நியூயார்க் தலைமைச் செயலகம் தெற்குஆசியாவில் தன் தெற்காசிய பணியாளர்கள், அரசு அதிகாரிகளுக்கு நடத்தும் பிரம்மாண்ட குழந்தை நேயப் பள்ளி பணிமனை    Child-friendly School Workshop.

Security Briefing – பாதுகாப்பு அறிவிப்புகள்! UN / International Organisations இவர்களின் ஒரு சடங்கு. திங்கள் கிழமை இப்படிப் பேச வந்தவர், உள்ளூர் மக்களின் சாலை விதிகள் அறியாமை, சிறு திருட்டுகள், அடிக்கடி வெடிக்கும் வீதியோரப் போராட்டங்கள் எல்லாவற்றையும்… “High/Medium/Low…Risk”  என சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நில நடுக்க அபாயம் High Risk. 75 ஆண்டுக்கு ஒரு முறை நேபாளத்தில் பெரிய நில நடுக்கம் வருகிறது.. கடைசியாக நில நடுக்கம் வந்து 74 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றார். அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது! நன்கு ஆராய்ந்துதான் UNICEF காத்மாண்டு வைத் தெற்காசியப் பணிமனனக்குத் தேர்வு செய்திருக்கிறது. Welldone!

Child-friendly Schools எனது PhD Topic என்றபடியால் எனக்கு Resource Person Status….ஆனால் அவர்கள் முன்னமே தயாரித்த Module/Package அடிப்படையில் Manual /கையேட்டிலிருந்து ஒரு பகுதியை ஒரு மணி நேரம்…இரு குழுக்களுக்கு நேற்று facilitaton

சிலி நாட்டைச் சேர்ந்த Carlos Vasquez  (Chile) என்ற Architect….Improving Learning Space என்ற தலைப்பில் Desingning Child-friendly Schools என்ற தலைப்பில் மிக அழகாக இயற்கை, சுற்றுச்சூழல், வடிவமைப்பு என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பல நாட்டு அனுபவங்களையும் படங்களும் தொகுத்துத் தந்தார்

மற்ற எல்லா வெட்டி வியாக்கியானங்களைவிட… ஒரு கட்டிடத்தின் திசையைக் காற்று, சூரியனின் திசையை மனதில் கொண்டு வடிவமைக்க வேண்டும் என்று சொன்ன இந்த அமர்வு மிக மிக பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளின் உடல் நலம், உள நலம், பாதுகாப்பு அனைத்துக்கும் வடிவமைப்பில் தீர்வு இருப்பதை உணர முடிந்தது. சூழல் சரியாக இல்லாவிட்டால் எந்த அற்புத கற்பிப்பு முறையும் குழந்தைக்கு மகிழ்ச்சி தர இயலாதுதானே… உள நலத்துக்கு உடல் நலம் போல தரமான கல்விக்குத் தரமான வடிவமைப்புடன் கட்டமைப்பு மிக மிக முக்கியம்…Very True!

“நான் போகும் ஒவ்வொரு ஊரிலும் நான் நடந்து சென்று அவ்வூரின் கட்டிடங்களைப் பார்க்கிறேன். சுற்றியுள்ள கட்டிடங்கள் எல்லாம் வழிவழியான வடிவமைப்பின் சிறப்பில் பொலிவைப் பொழிந்தாலும் பள்ளிக் கட்டிடம் மட்டும் ஏன் அழுது வடிகிறது? என்று கேட்டுவிட்டு நேபாள் கோவில்களின் படங்களைக் காட்டிவிட்டு, “ஏன் இப்படி ஒரு கட்டிடத்தில் குழந்தைகள் படிக்ககூடாது” என்றார்…மிக மிக மிக சரியான கேள்வி… “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே…”

திண்ணைப் பள்ளிகளைப் போல இயல்பான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான, மரபுக்குப்-பொருத்தமான வடிவமைப்புகள் உண்டா? எத்தனை கோடி செலவு செய்து நியூயார்க்கில் Standards உருவாக்கினாலும்…இழந்ததை மீட்டுத் தர முடியுமா? இப்போது Neighbourhood Schools; Community Participation எனப் பேசி நேரத்தை வீணடித்தாலும்…

ஏதோ கார்லோஸ் போன்ற சிலர் இருப்பது ஆறுதல்தான்!

CFA GCD

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s