பறக்கும் விமானத்தில் Cricket Updates!!

மக்கள் பறக்கும்போது கூட நிம்மதியாகப் பறக்க வேண்டாம் என முடிவு செய்ததால் எங்க விமானி கிரிக்கெட் ஸ்கோர் சொல்கிறார். ஸ்கோர் அறிந்து தீவிர ரசிகர்கள் நிம்மதி இழப்பது ஒரு விஷயம் இவருக்கு எங்கிருந்து அப்டேட் வருகிறது என்ற கேள்வியுடன் இப்படி கிரிக்கெட் கவனத்தில் எப்படி எங்களைக் கொண்டு சேர்ப்பீங்க சாமி? என்ற கேள்வியும் உதிக்கிறது.

கபில்தேவ் ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் ஆர்வம் பெரிதாக இல்லை. கபில்தேவுக்கு முன்பும் பின்பும் Real Player and Real Hero யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; வேறொரு நாட்டில் பிறந்திருந்தால் இது போன்ற ஒரு ‘Natural Player’ இன்னும் கொண்டாடப்பட்டிருப்பார் ‘நிறம், சாதி, பிரதேசம், பின்னணி, செல்வம், செல்வாக்கு போன்ற ஆதிக்கங்களையும் இன்ன பிற ‘இந்திய பலவீனங்களையும்’ தாண்டி தன்னை நிரூபித்த ஒரு அற்புதத் திறமையாளர். பிறரைக் குளிர்விக்கப் பேசாமால் உள்ளபடியே தன்னை வெளிப்படுத்தும் ‘இயல்பான’ நன் மனிதர். ஏழு வயது தக்ஷ், இரண்டே முக்கால் வயது அமிதேஷ் தோனி ரசிகர்கள். தக்ஷ் ஒரு முறை சொன்னது “எனக்கு தோனி ரொம்ப பிடிக்கும்மா ஆனா தோனி முடி வெட்டினதும் கொஞ்சம்தான் பிடிக்குது”.

 

விமானிகளின் அறிவிப்புகள் பெரும்பாலும் சடங்குதான். யாருக்கும் எதுவும் புரியும்படி பேச வேண்டும். இப்படி ஒரு அவசியம் அவர்களுக்கு இல்லை போலும்

எப்போதும் அவர்களின் Surname மட்டும் புரியும். இன்று ஒரு சிங் ஓட்டுகிறார்

 

ஒரே ஒரு முறை அந்தமானிலிருந்து வரும்போது. அருமையாக அறிவிப்பு செய்தார் ஒரு விமானி. காற்றின் திசை, வேகம், காற்று எந்த அளவுக்கு விமானத்தை முன் நோக்கித் தள்ளி வேகத்தைக் கூட்டுகிறது. அதனால் எவ்வளவு நேரம் சேமிக்கபடும். இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்களைத் தெளிவாக சொன்னார்

 

*** ஓட்டுநர், பறக்குநர், மாலுமி என எல்லாம் யோசித்து முடித்தபின் நல்ல வேளையாக விமானி நினைவுக்கு  வந்தது. என் முந்தைய அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்கள் தம்மை அறிமுகம் செய்யும் போது ‘Ground Pilot’ எனச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் இவர்கள் Sky drivers??????

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s