வேறு வழியே இல்லையென்றால் …

நான் PhD க்காக கல்லூரி செல்லத் தொடங்கியபோது தக்ஷ் நான்கு மாதக் குழந்தை. அப்பா மட்டும்தான் அப்போது ஓய்வு பெற்றிருந்தார்கள். அப்பாவும் தக் ஷும் வீட்டில் இருப்பார்கள்.

 

மயிலாப்பூரில் வீடு. நுங்கம்பாக்கத்தில் கல்லூரி. 

லைசென்ஸ் வாங்கிய பிறகும் வண்டியை ஓட்ட பயந்து கொண்டிருந்தேன். தக்ஷ் பிறந்தவுடன் வேறு Choice இல்லை. ஆய்வும் தேவை; தக்ஷ் குட்டியையும் பார்க்க வேண்டும் என்றால் வண்டி ஓட்டுவதே ஒரே வழி!

 

ஒரு நாள் அக்கா அவள் Hero Honda Street ல் என்னுடனே வந்தாள்! …இராதாகிருஷ்ணன் சாலை-கதீட்ரல் சாலையில் ஜெமினி மேம்பாலம் வரை! …நான் அப்பாவின் கைனடிக் ஹோண்டாவில் பயத்துடன்! “இதற்குப் பிறகு நீ போ! உன்னால் முடியும்” என்று சொல்லிவிட்டு அவள் நந்தனம் செல்ல இடப்பக்கம் திரும்பினாள்.

 

நான் கொஞ்சம் கொஞ்சமாக வண்டி ஒழுங்காக ஓட்டத் தொடங்கினேன். பயத்தில் ஓட்டியதால் சிலரைப் பதட்டப்படுத்தி, சிலரிடம் திட்டுவாங்கி, பல முறை விழுந்து எழுந்து என ஓரிரு வாரங்களில் நன்றாக ஓட்டத் தொடங்கிவிட்டேன். அப்பாவின் ஹீரோ ஹோண்டா, என் ஹோண்டா ஆக்டிவா இரண்டிலுமாக 50,000 கிமீ க்கு மேல் ஓட்டி விட்டேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s