மற்றுமொரு மலர்வனம்…

மற்றுமொரு மலர்வனம்

மற்றுமொரு மலர்வனம்

விஷ்ருத் முழுக்க அப்பா, அம்மா அன்பில் வளர்ந்தான்.

 

அவனுக்குத் தடுப்பூசி போட அழைத்துச் சென்றதெல்லாம் அம்மா-அப்பாதான். எப்போதும் Well Baby என எழுதுவார்கள் Dr கள். அம்மா அவனுக்காக தினமும் கேழ்வரகு ஊரவைத்து முளைகட்டியதை அரைத்து அம்மா அவனுக்குக் கஞ்சி செய்து தருவார்கள். Well Baby யின் ரகசியம் கேட்டு, தினமும் எப்படி  இப்படி…என டாக்டர்களே வியந்தார்களாம். எப்பொழுதும் சிரித்தபடியே இருக்கும் அழகான அறிவுக் குழந்தை விஷ்ருத்.

 

அம்மா-அப்பாவுடன் அம்மா பள்ளிக்கு அருகில் இருந்த மாண்டிசோரி பள்ளியிக்கு விச்சு சென்றான். அப்பா-அம்மாவுடன் காலையில் கிளம்பி, அவர்களுடனே திரும்பி வருவான்.

 

பிறகு DAV செல்லத் தொடங்கியவுடன் விச்சுவின் அதிர்ஷ்டத்தில் அக்கா அலுவலகத்திலேயே கீழ் தளத்திலேயே அலுவலகமே நடத்திய காப்பகம் உருவானது. அக்கா வீடு திரும்ப தாமதம் ஆகும் அதுவரை விச்சு காப்பகத்தில் இருக்கவேண்டாம் என அப்பா-அம்மா நேரடியாக அக்கா அலுவலகம் சென்று விச்சுவை வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுவார்கள்.

 

ஓரிரு மணி நேரம் கூட குழந்தையின் வாழ்வில் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் அம்மா-அப்பா! இதற்காக ஏன் நான் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும் என்றெல்லாம் அம்மா-அப்பா நினைத்ததில்லை. குழந்தைகளை மையமாகக் கொண்ட வாழ்வே அவர்கள் வாழ்வு. விஷ்ருத் அப்பாவுடன் கைனடிக் ஹோண்டாவில் செல்லாத இடமே இல்லை.

 

தக்ஷ் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போது என் PhD தொடங்கி அவளுக்கு நான்கு வயது பூர்த்தியாகும் முன் நிறைவடைந்ந்தது. அவளைத் தூங்க வைத்துவிட்டு கல்லூரி செல்வேன். இரண்டு மணி நேரத்திற்குள் வந்துவிடுவேன். வீட்டில் அவள் முழித்து சிணுங்கினால் அப்பா கல்லூரி எண்ணில் அழைப்பார்கள். இருபது நிமிடத்தில் வீட்டில் இருப்பேன். பெரும்பாலும் அப்பா அழைக்க மாட்டார்கள். அப்பா எப்போதும் எங்களுக்குப் பதட்டமும், சிரமும் தரக்கூடாது என நினைத்து நானே வீட்டிற்கு அழைத்து கேட்டாலும் நல்லா விளையாடடிட்டுதாம்மா இருக்கா என்றே சொல்லுவார்கள்.

 

ஆனால் தக்ஷ் ஒரு அபூர்வ தெய்வப் பிறவிதான்! என் அப்பாவின் அரவணைப்பு அவளுக்கு முழு பாதுகாப்பும் தந்திருக்க வேண்டும். எந்தத் தொல்லையும் தராமல் என் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு தந்து மகிழ்ச்சியான குழந்தையாகவே வளர்ந்தாள். தாத்தா-பாட்டி மட்டுமல்லாமல், பெரியம்மா-பெரியப்பாவின் செல்ல மகளாகவே வளர்ந்தாள். விச்சு அண்ணா வேறு அவளை, பேபீஸ், பேபிக்குட்டி, முன்னா, உட்டா, உன்னி என்றெல்லாம் கொஞ்சுவான். புனா, பேபியை எனக்கு ஏன் ரொம்பப் பிடிக்குது என்று கேட்பான். அவள் பிறக்கும்வரை, என் வயிற்றில் கை வைத்து, “புனா, பாப்பா எப்ப வரும் என தினமும் கேட்பான்”

பகல் நேரம் தூங்கி முழித்தவுடன் படுத்தபடியே “தாத்தா” என்றுதான் குரல் தக்ஷ் கொடுப்பாள்! அவளைப் பொறுத்தவரை தாத்தாதான் எல்லாம்.

அவளுக்கு ஒரு வயது ஆகும் முன் ஒரு நாள் நள்ளிரவு 2 மணிக்கு முழித்தாள். அப்பா அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்கள். அவள் கைகாட்டிய திசையில் அவளைத் தூக்கிக் கொண்டு சென்றார்களாம். வீட்டின் அருகில் விருபாக்ஷீஸ்வரர் கோவில் இருந்தது. அங்கே ஒரு மயில் இருந்ததால் குழந்தைகளுக்கு அது மயில் கோவில். அந்தக் கோவிலை நோக்கிக் கை காட்டியிருக்கிறாள். அங்கே போய் கதவில் தொங்கிய பூட்டை இழுத்துப் பார்த்தபின் வீட்டிற்குத் திரும்பி நடந்து வந்தார்கள்.

 

இப்படியெல்லாம் நான்கு பேரக்குழந்தைகளும் அப்பாவிடம்தான் எல்லா அடாவடித்தனமும் செய்வார்கள். அப்பாவும் கண்டிக்காமல் அவர்கள் சொல்வதையெல்லாம் தெய்வீகப் பொறுமையுடன் செய்வார்கள். சாப்பிடுவது, துணிமாற்றுவது எல்லாம் தாத்தாதான் செய்ய வேண்டும் என்று வேறு குழந்தைகள் கூடுதல் அன்புத்தொல்லை வேறு தருவார்கள்.

  

ரித்திகா பிறந்தவுடன், அப்பா தப்பித் தவறி அவளை மடியில் வைத்திருந்தால் கொஞ்சம் வில்லி ஆகிவிடுவாள் தக்ஷ். அமிதேஷ் கேட்கவே வேண்டாம். அப்பாவிடம் மட்டுமே ஒட்டிக் கொண்டு இருப்பான். நல்ல வேளை அவன் பிறப்பதற்கும் தக்ஷ் கொஞ்சம் பக்குவம் அடைந்துவிட்டாள்.

 

ஆனால் நான்கு பேரில் விச்சுதான் வம்பு குறைவு! அப்பா-அம்மாவிடம் ஏதாவது அறிவுபூர்வமாகப் பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருப்பான்.

 

அப்பா மீது முதுகில் ஏறி விளையாடுவது நான்கு பேருக்கும் பிடித்த விளையாட்டு.

 

தக்ஷ் க்கு ஒன்றரை வயது ஆகும்போது அம்மாவும் ஓய்வு பெற்று விட்டார்கள். முதலில் ஒரேடியாக அப்பா செல்லமாக வளர்ந்த தக்ஷ் தாத்தா எனக்குதான் சொந்தம் என்பதுபோல கொஞ்ச நாள் அம்மாவுடன் போட்டி போட்டாள். பிறகு அப்படியே பாட்டி போற்றும் பேத்தியாக மாறிவிட்டாள். நான் பாட்டியை மாதிரிதான் இருக்கேன். நான் பாட்டியை மாதிரி புத்திசாலி என்று சொல்வாள். நல்லாசிரியை விருது பெற்ற அம்மாவின் நல்ல மாணவி தக்ஷ்.

 

தக்ஷ் குட்டியைக் கிளப்பி வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புவது, மீண்டும் கூட்டி வருவது எல்லாம் அப்பாதான். அவளுக்கு என்ன பிடிக்கும் எனத் தெரிந்து, பிடித்ததை எல்லாம் கேட்டுக் கேட்டு செய்து தருவது அம்மாதான்! அவள் வீட்டுப்பாடம், அன்றாடத் தேர்வுக்குப் படிப்பதற்கு எல்லாம் உடன் இருந்து உதவுவது எல்லாம் அம்மாதான்தூங்காமல், அம்மா-அப்பாவை தூங்கவே விடாமல் சில நேரம் இவர்கள் படுத்தினாலும் ஒரு போதும் அரட்டல்-மிரட்டல் என எதுவுமே இல்லாது உற்சாகமாக, ஊக்குவித்தபடி, அறிவையும், அன்பையும் மட்டுமே புகட்டி வளர்க்கிறார்கள்.

 

பேரன்-பேத்தி கூடவே இருப்பது உங்களுக்கு யோகம்தான் எனப் பலர் சொல்வார்கள். பேரன்-பேத்திகளுக்கும் எங்கள் மூவருக்கும்  அது பெரும் யோகம்தான் ஆனால் அம்மா-அப்பாவுக்கு ஓய்வுக்குப் பிறகும் ஓய்வே இல்லைஆனாலும் மற்றுமொரு மலர்வனம் போலத்தான் அம்மா அப்பா இந்த நால்வரையும் போற்றுகிறார்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s