செய்தால் செம்மையாக…

என் ஆய்வு சென்னையின் 5 மண்டலங்களிலுள்ள 16 பள்ளிகளில். ஒரு மண்டலம்கூட மேடவாக்கம் அருகில் இல்லை. கொளத்தூர், பெரம்பூர், செம்பியம், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, வடபழனி, சங்கரபுரம், சுப்பராயன் தெரு, அண்ணா நகர், அஷோக் நகர், நெசப்பாக்கம்  என சென்னையின் பரப்பளவை முழுமையாக உணரும்படி என் Data Collection ஓராண்டு நீடித்தது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும் நான் சென்னையை முழுமையாகக் கண்டறிந்தது இந்த ஓராண்டில்தான். 16 பள்ளிகள், 140 ஆசிரியர்கள், 15 வகுப்பறைகள் உற்று நோக்கல் (மூன்றாம் வகுப்பு வரை) 15  மாணவர்கள் குழுக்களுடன் குழு நேர்காணல் (நான்கு-ஐந்து வகுப்பு), 3 பெற்றோர் குழுக்களுடன் விவாதம், ஒரு உள்ளூர்த் தலைவரின் பங்களிப்பைப் பதிவு செய்தல் என களைகட்டிய ஆய்வுக்கான தகவல் சேகரிப்பு என் ஆய்வின் பலம் என்று ரிவர் தாம்ஸன் யுனிவர்சிட்டி, கனடாவிலிருந்து என் ஆய்வறிக்கையை மதிப்பீடு செய்த க்ரான்ட் லார்சன்

உணர்ந்து பாராட்டியபோது அலைச்சலின் வலி எல்லாம் மறந்து போனது. ஆனால் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்திருந்தால் இன்னும் சீக்கிரம் ஒழுங்காக முடித்திருக்கலாம். ஒரு வித மலைப்பில் சோர்ந்திருந்தபோது ஒரு தொய்வு வந்தது. அம்மா ஒரு முறை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததால் Data Collection Restart செய்தேன். என் ஆய்வு வழிகாட்டி என் Time Sense க்காக ரொம்பவே வருந்ந்தினார். அதாவது Time sense என்பதே இல்லை என்பதற்காகஎப்படியோ எல்லோரும் கூடி எனக்காக உழைத்ததாலும், ஒத்துழைத்ததாலும், நல்லாசிகளாலும் நானும் முடித்துவிட்டேன் PhD.

நான் மட்டுமில்லைஎன்னைப் போல் எனக்குத் தெரிந்தே சிலர் இருக்கிறார்கள். செய்தால் செம்மையாகச் செய்யவேண்டும் என்று சில காலம் எதுவுமே செய்யமால் இருந்துவிட்டு பிறகு உண்ணாமல் உறங்காமல் உழைப்பார்கள். நேரத்தை மதிப்பவர்களுக்குத்தான் எங்களைப் போன்றவர்களைப் பார்த்தால் இரத்தக் கொதிப்பு வரும்.என்ன செய்வது? இறைவன் படைப்பில் மக்கள் பலவிதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!!!

Advertisements

One thought on “செய்தால் செம்மையாக…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s