மேல்மா என்றால் கடவுள்???

மேல்மா என்றால் விருந்தினர்…

விருந்தினர் என்றால் என்ன? கேட்டுக் கற்றுக் கொண்ட சில சொற்களில் ஒன்று. எனக்கு மொழிபெயர்த்து சொல்பவர்கள் அடிக்கடி, “Because you are our guest…”  என்று சொல்லித் தொடர்வார்கள். பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஆசிரியர்கள்கூட எப்படி சாப்பிடாமல் அனுப்புவது என்று யோசிக்கிறார்கள். ஒரு ஆசிரியை, “என்னுடன் வா! உனக்குப் பிடித்த உன் நாட்டு உணவு எதுவாக இருந்தாலும் சமைத்துத் தருகிறேன்” என்கிறார்கள்

High Profile Visitors  அல்லது Whites  என்றால் சில அதீத வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டுமே இல்லாத எனக்கு இந்த அன்பு, பரிவு என்பது ஆஃப்கான் மண்ணின் மணத்தைத்தான் பிரதிபலிக்கிறது

கேட்டுக் கேட்டு சமைத்து, கேட்டுக் கேட்டு பரிமாறுவது மட்டுமல்ல… தரும் அளவின் அபரிமிதமும் அசர வைக்கிறது. ஒரு வேளைக்கு 5 கப் தேநீர் குடுவையில் …தயவு செய்து சிரிக்காமல் தொடர்ந்து படிங்க! அரை டஜன் ஆப்பிள்-ஆரஞ்ச் என எல்லாமே நிறைவுக்கும் மேலாக…

நீ யார்? உனக்கு நான் இதையெல்லாம் செய்ய வேண்டும்? என்ற நினைப்பே துளி கூட இல்லாமல் உள்ளன்போடு எல்லாம் செய்கிறார்கள்.

என்னை எதிர்பார்க்க ஏர்போர்ட் வந்த  அதே ஓட்டுநர்தான் இரண்டு நாள் visit க்கும் வந்தார்.  கடைசி நாள் என்னிடம், “நாளை காலை நானே வந்து உன்னை ஏர்போர்ட் அழைத்துச் செல்வேன்” எனக்கூறிவிட்டு “இன்ஷா அல்லாஹ்” என்றார். மறுநாள் குறித்த நேரத்திற்கு முன்பே அழைத்து சென்று, “காத்திருப்பதுகூட காருக்குள்தான்!  இரண்டு மணி நேரம் போன பின்பு விமானம் இரத்து என அறிவிப்பார்கள்! உன்னை விட்டு விட்டுப் போக முடியாது எனக் கூறி ஒரு மணி நேரம் காத்திருந்து  விமானம் புறப்பட்ட பின்னரே திரும்பிச் சென்றார்”. UNHAS United Nations Humanitarian Air Services விமானம் வந்து இறங்கும் நங்கார்ஹர் ஏர்போர்ட்,  ஏர்போர்ட்  என்ற பெயரில் பொட்டல்  காடு! பாதுகாப்பு அயல் நாட்டு இராணுவத்தின்  பொறுப்பில்! சுற்றிச் சுற்றி அயல் நாட்டுப் படைகளின்  முகாம்.

பஷ்டூன், தாரி (Dh) இங்கு வழங்கப்படும் மொழிகள்…இரண்டுக்கும் எழுத்து வடிவம் “அரபிக் தான்”. .. பஷ்டூன்தான் சிரமம் .நம்ம ‘மாணவர்’ அண்ணன்கள் பஷ்டூன்….

மேல்மா என்பதுதான் நம்ம ஹிந்தியில் மேஹ்மான் எனப்படுவதாம். தரம்சால் என்றால் கோவில்…தர்மசாலை அப்படின்னு நம்மகூட சொல்லிக்கிறோமே

பாகிஸ்தானிலிருந்து திரும்பியவர்கள் உருது அத்துப்படியானதால் “ஹிந்துஸ்தான்-தானே” என விசாரித்துவிட்டு ஹிந்தியில் பொளந்துகட்டுகிறார்கள்! நமது தோடா-தோடாவில் அவர்கள் மனம் குளிருமா தெரியவில்லை… ஆனால் தில்லியில் ஒரு டாக்ஸி டிரைவர் பையன் என் ஹிந்தி Perfect என்று சொன்னான். இதைச் சொல்ல அவன் இதுக்கு முன்னாடி எத்தனைக் கொடுமையான தோடா-தோடா வெல்லாம் கேட்டிருக்கணும்

இதுவரை நான் போன 3-4 நாடுகளில் என்னைப் பார்த்தவுடன் Are you a Srilankan? எனக்கேட்பார்கள். ஆனால் இங்கு மட்டும்தான் Are you from Hindustan? எனக் கேட்டுவிட்டு….”We love Indians…Our long-time friends” என்று சொல்லிக் குளிரவைத்தவர்கள் குறைந்தபட்சம் 10 பேர் இருப்பார்கள்! இன்னும்  ஒரு சில நாட்டினராவது இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே! இந்தியாவின் நட்பை அப்படியே நம்புவதோடு, நேராகவே இந்தியர்களை எங்களுக்குப் பிடிக்கும்

இங்கு ஹிந்தி படம், பாடல்கள் மட்டுமல்ல மெகா சீரியல்களும் உள்ளூர் மொழியில் புழங்குகின்றன… “மாமியாரும் ஒரு காலத்தில் மருமகள்தான்” அப்படின்னு ஒரு சீரியலைப் பார்த்து விட்டு இங்கேயும் எல்லோரும் அழுகிறார்களாம்”…

ஆஃப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு வயதுக் குழந்தையாகச் சென்று 20 வயதில் திரும்பி வந்த பெண்ணிடம்… இரு நாட்டினருக்கிடையில் திருமணங்கள் உண்டா எனக் கேட்டபோது நல்ல பதில் வந்தது…”பெண் கொடுப்பார்கள்! ஆனால் எனக்குத் துணிச்சல் மிக்க ஆண்தான் பிடிக்கும்! ஆஃப்கான் ஆண்கள்தான் துணிச்சல் மிக்கவர்கள்”

மேல்மா என்றால் கடவுளோ என நினைக்கும் அளவுக்குத் திக்குமுக்காடச் செய்யும் விருந்தோம்பல்… பாலைவனத்தில் 10 வகை பரிமாறுகிறார்கள். பச்சைத் தேநீர் விரும்பிக் குடித்தாலும்… இந்தியாவிலிருந்து வந்தவர் என அறிந்ந்து பால்-சர்க்கரை சேர்த்து நம் தேநீர் தருகிறார்கள்.

ஆஃப்கான் விருந்தோம்பல்

ஆஃப்கான் விருந்தோம்பல்

 நீங்க வேணும்னா ஒரு மாசம்  இங்க வந்து இருந்து பாருங்களேன் உங்க எடை மட்டுமில்லை உயரமும் கூடிடும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s