களத்திற்குப் போய் சேரும் முன் . . .

புகைப்படங்களோடு எழுதலாம் என நினைத்தேன். பிறகு அவற்றைத் தனியாக ஏற்றலாம் என நினைத்துத் தொடங்கிவிட்டேன். எப்படி இருந்தாலும் என்ன இன்னைக்கு மகாசிவராத்திரி தானே

 

1979 ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது பாகிஸ்தானில் அகதிகளாயிருந்து நாடு திரும்பியவர்கள் சரளைக்கல் பாலைவனத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்

 

அவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் பணியை பல நிறுவனங்கள் கூடிச் செயலாக்கி வருகின்றன…

 

செல்லும் வழியில் அமெ. படைகள் ஆஃப்கானிஸ்தானி-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குத் தம் இராணுவ வாகனங்களில் சென்று கொண்டிருந்தன. அவர்களை யாரும் தாண்டக்கூடாதாம்பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்காது ஆமை வேகத்தில் ஆதிக்கத்தை நிலை நாட்டி  நகர்ந்துகொண்டிருந்தனர்.

 

என்னுடன் வந்த சகபணியாளர் மசூதா, இப்போது யாருக்காவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால்கூட அவர்கள் ஊர்ந்து  சென்று உயிரிழக்க வேண்டியதுதான் என்றார்; இவர்கள் எல்லைக்குப் போய் என்ன செய்வார்கள் என்றால், “இரண்டு நாட்டினரையும் சண்டை போடச் சொல்லி ஊக்குவிப்பார்கள்” என்றாள். இராணுவத்தினருக்கு உணவு மத்திய கிழக்கு ஆசியா, பாகிஸ்தானிலிருந்து வருகிறதாம். உணவு, தண்ணீர், உடைகள், இருப்பிடம், வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள், வாகன எரிபொருள்கள், மின், தொலைபேசி, இணைய  இணணப்புகள், என எத்தனை விதமான ‘சப்ளை’ தொழில்கள்  போர்களால் கொழிக்கின்றன.   நிர்வகிப்போர், மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு போர்த்தொழிற்சாலையால் எனப் பேசிக்கொண்டிருந்தோம். சண்டையை மேலும் வளர்ப்பதோடு நாட்டின் கனிம வளங்களைக் குறிவைக்கிறார்கள்!

சல்லடை போட்டு ஒசாமாவைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு மலை மலையாகக்

சதாமைப் பிடிக்க முடிந்தவர்களால் ஏன் ஒசாமாவைப் பிடிக்க முடியவில்லை? ஏனென்றால் ஒசாமா அவர்களின் ஆள் என்று சொல்லிவிட்டு, வீட்டில் உள்ளோர் என்னை இதையெல்லாம் எங்கும் போய் பேசாதே என்கிறார்கள். ஆனால் நான் பேசுவேன் என்றார்

 

இதற்குள் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்கள் சாலையைவிட்டு இறங்குவது போல ஒதுங்கி  வழிவிட்டாலும் ஒருவன் தன் டாங்கரால் இடிப்பதுபோல பாவ்லா காட்டினான். உடனே வண்டி ஓட்டியவருக்கும் மசூதாவுக்கும் கடும் கோபம் வந்துவிட்டது. “ஒதுங்கி நிற்பவர்களிடம் தன் பவரைக் காட்டிச் செல்கிறான் அதுவும் எங்கள் நாட்டில் வந்து… இதையெல்லாம் பார்த்தால் எனக்குத் தலை வலிக்கும்!!!”

 

அவர்களுக்கெல்லாம் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் தானே சொந்த நாட்டையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு இங்கே வந்து காத்துக்கிடக்கிறார்கள் என்றபோது…”ஆம் என் மைத்துனர் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருக்கிறார். அவர்கள் திரும்பிப் போகும் தினம் வந்ததும் ரொம்ப உற்சாகமாக இருப்பார்களாம். எல்லோரும் வலுக்கட்டாயமாக இங்கே அனுப்பப்பட்டவர்கள்தான்”…”சரி! நிச்சயமாகத் திரும்பிப் போவதற்குள் ஆஃப்கான் மக்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள்! மாறிவிடுவார்கள்!” என்றதும்உங்களை மாதிரியெல்லாம் இல்லை! அவர்களை எங்களை மதிக்கவே மாட்டார்கள்! மொழிபெயர்ப்பாளரிடம் எங்கே போகிறோம் என்று தகவல்கூட சொல்லமாட்டார்களாம்! அதிகார உணர்வு ரொம்பவே அவர்களுக்கு என்றார்.

 

ஒருவழியாக பள்ளிக்கூடம் போய் சேர்ந்தோம். சமூகத்தினரின் கோரிக்கைகள் மூலம் உருப்பெற்ற இப்பள்ளி, அவர்களின் பேராதரவுடன் ஓரிரு ஆண்டுகளிலேயே 22 ஆசிரியர்கள், 850 மாணவர்களைக் கொண்டு (இரண்டு வேளைகளில்) இயங்குகிறது. ஆனால் இவர்களுள் ஐவர் மட்டுமே பெண் ஆசிரியைகள்தகுதி பெற்ற பெண் ஆசிரியர்கள் இல்லாததால் ஆஃப்கானின் பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிறது!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s