UN குட்டி விமானம்: 30 பயணிகள் மட்டும்…காபுலிலிருந்து ஜலாலாபாத் வழியாக இஸ்லாமாபாத் வரை

இத்தனை சிறிய விமானம்… இத்தனை சிறிய பயணமும் அரிதுதான். ‘We will be landing shortly’ இந்த அறிவிப்புக்குப் பிறகு தரை இறங்கும்  நேரம்தான் மொத்த பயண நேரமே. காபுலிலிருந்து 20 நிமிடத்தில் நங்கார்ஹர் ப்ராவின்ஸ். அதன் தலைநகரம்தான் ஜலாலாபாத்.

எளிதில் தரைவழியாகக் கடக்கும் தூரத்தை பாதுகாப்பு கருதி பறந்து கடக்க UN தன் பணியாளர்களுக்கும் தன்னைப் போன்ற AidWorker Community க்கும் இப்படி ஒரு சேவையை நடத்துகிறது. 

நாங்கள்கூட கிண்டலாக சொல்வது உண்டு. தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த இந்த ஹோட்டலுக்குத் தந்த பணத்தில் ஒரு ஹோட்டலே கட்டியிருக்கலாம்.  விமானப் பயணங்களுக்குத் தந்த பணத்தில் சொந்த விமானமே வாங்கியிருக்கலாம். அப்படித்தான் யாராவது யோசித்து இந்த சேவையைத் தொடங்கியிருப்பார்கள்…

விமானத்தின் உருவம் மட்டுமல்ல  டெர்மினல்கூட ஒரு வங்கியைத்தான் நினைவூட்டுகிறது. ஆனால் அச்சு அசலாக எல்லா வழிமுறைகளும் அப்படியே… செக் இன் ஒருமணி நேரம் முன்பு…தவறாமல் ஒரு மணி நேரத் தாமதம். இந்த பாதுகாப்புப் பிரச்சனை இல்லையென்றால் இங்கு காத்துக் கிடந்த நேரத்தில் காற்றாட காரில் போயிருக்கலாம்.

டிக்கெட் என்ற பெயரில் ஒரு அரைப் பக்க ப்ரிண்ட் மற்றும் போர்டிங் பாஸ் என்ற பெயரில் 18 எண்ணிட்ட ஒரு அட்டை தந்தார்கள்.  இருந்த ஒரே ஒரு கேபின் க்ரூ பெண்மணி , மறக்காமல் அதை வாங்கிக் கொண்டார்கள். Reusable Boarding Pass….நானும் இருக்கை எண் 18ஐத் தேடி அலுத்து காலியாக இருந்த கடைசி இருக்கையில் அமர்ந்தேன். அப்புறம்தான் புரிந்தது 1 ABC முதல் 10 ABC வரைதான் இருக்கைகள். ஓடி வந்து பிடித்த சீட் பிடித்துக் கொள்ளலாம். கடைசி இருக்கை நம் பேருந்தில் போல நீளமான 4 seater. மற்றபடி வலப்புறம்Two-seater இடப்புறம் Single-seater. இல்லாட்டி எப்படி நடுவில நடக்குறது.

சேஃடி ப்ரொசீஜர்ஸ் எல்லாம் சொன்னார்கள்…எப்படியோ take off ஆனது. மேலேயிருந்து பார்த்தால் காபுல் முழுக்க பஞ்சுப் பொதியாய் ஆங்காங்கே பனி…இறங்கும் முன் நங்கார்ஹரில் மணற்பரப்பும் பசுமையும் தெரிந்தது…சுடாத செங்கல் கட்டிடங்கள் எங்கும்… உருட்டிப் புரட்டி தரை இறக்கினார்கள்

இது என்ன பேரிடர் மறுவாழ்வு தற்காலிகக் குடியிருப்பா… எனத் தோன்றியது. பிறகு பார்த்தால் அதெல்லாம் ராணுவத்தினர் இருப்பிடங்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் இராணுவ உடையில் அயல்நாட்டு தடியன்கள்… அமெரிக்க இராணுவத்தினர் மட்டும் 55,000 பேர் என ஓட்டுநர் சொன்னார். என்ன செய்வார்கள் அவர்கள் எல்லலம் என்றால், “அப்பாவி ஏழை மக்களைக் கொல்வார்கள்” என்றார். 

அப்படி ஒரு முகாமிற்குள் விமானம் தரை இறங்கியது. வந்துசேர்ந்தாயிற்று…  அக்கறையுடன் கேட்டுக் கேட்டுப் பபர்த்துக் கொள்கிறார்கள்.  நாளை முதல் செயல்திட்டங்கள் பார்த்துவிட்டு புதன் அன்று மீண்டும் குட்டி விமானம்!!!

*****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s